Asianet News TamilAsianet News Tamil

தேசிய விருதுக்கு எதிராக கெட்ட வார்த்தைகளால் பொங்கிய ரசிகர்கள்...மன்னிப்புக் கேட்ட மம்முட்டி...

தனக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வழங்காத தேர்வுக்குழுவை மட்டமான வார்த்தைகளால் தனது ரசிகர்கள் வசைபாடியதைத் தொடர்ந்து மம்முட்டி மன்னிப்புக்கேட்டார். டெல்லி விருதுப் பட்டியலில் கூட அப்படம் இடம் பெறவில்லை என் தெரிந்தவுடன் தற்போது ரசிகர்களும் சைலண்டாகிவிட்டனர்.

actor mammootty apalogizes on behalf of his fans
Author
Chennai, First Published Aug 12, 2019, 9:22 AM IST

தனக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வழங்காத தேர்வுக்குழுவை மட்டமான வார்த்தைகளால் தனது ரசிகர்கள் வசைபாடியதைத் தொடர்ந்து மம்முட்டி மன்னிப்புக்கேட்டார். டெல்லி விருதுப் பட்டியலில் கூட அப்படம் இடம் பெறவில்லை என் தெரிந்தவுடன் தற்போது ரசிகர்களும் சைலண்டாகிவிட்டனர்.actor mammootty apalogizes on behalf of his fans

66-வது தேசிய விருதுகள் இரு தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டன. அதில் ‘மஹாநடி’, ’கே.ஜி.எஃப்’, ’பாரம் ’என பல்வேறு படங்கள் விருதுகளுக்கு தேர்வாகின. சிறந்த நடிகையாக கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்யப்பட்டார். கடந்த வருடம் மம்முட்டி நடிப்பில் வெளியான `பேரன்பு’ நல்ல விமர்சனங்களை பெற்று சுமாராகவே ஓடியது. இதில் மம்முட்டி சிறப்பான நடிப்பை வெளி ப்படுத்தி இருந்தார். இதனால் இந்தப் படத்துக்கு விருது கிடைக்கும் என அவரது ரசிகர்கள் காத்திருந்தனர். இயக்குநர் ராமும் அதற்குத் தேவையான பில்ட் அப்களை பல பேட்டிகளில் கொடுத்திருந்தார்.

ஆனால் விருது பட்டியலில் மம்முட்டி பெயர் இல்லை என்று தெரிந்ததுமே தேர்வுக்குழு தலைவர்களில் ஒருவரான ராகுல் ராவிலின் பேஸ்புக் பக்கத்தை அவரது ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக  ஆக்கிரமிக்க தொடங்கினர். கடும் சொற்களை பயன்படுத்தி ராகுல் ராவிலை வசைபாடினர். இதனால் ராகுல், மம்முட்டிக்கு ஒரு கோரிக்கை ஒன்றை வைத்தார். அதில், ``மிஸ்டர் மம்முட்டி உங்கள் ரசிகர்கள் என்னை நோக்கி வெறுப்பான சொற்களை பயன்படுத்தி பதிவிட்டு வருகின்றனர். `பேரன்பு’ படத்துக்கு தேசிய விருது கொடுக்கவில்லை என என்னைக் கேள்வி கேட்டு வருகின்றனர். அதற்கு விளக்கம் அளிக்கிறேன். முதலில் ஒன்றை சொல்கிறேன். நடுவரின் தீர்ப்பை யாரும் கேள்வி கேட்க முடியாது.actor mammootty apalogizes on behalf of his fans

அதேநேரம் உங்களின் `பேரன்பு’ திரைப்படம் பிராந்திய குழுவினராலே நிராகரிக்கப்பட்டதால் மத்திய குழுவின் பரிசீலனைக்கு வரவில்லை. இதுபுரியாமல் இழந்த ஒன்றுக்காக உங்களின் ரசிகர்கள் சண்டையிட்டு கொண்டிருக்கிறார்கள்” எனப் பதிவிட்டார். இந்தப் பதிவு வெளியான சில மணி நேரங்களிலேயே மம்முட்டி ஒரு பதிவை இட்டார். அதில், “மன்னித்துக் கொள்ளுங்கள் சார். இது பற்றி எனக்குத் தெரியாது. இருந்தாலும் நடந்த சம்பவங்களுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்”என உடனே பெருந்தன்மையாக மன்னிப்புக் கோரினார். மம்முட்டியே மன்னிப்புக் கேட்டவுடன் வெட்டியாய்ப் பொங்கிய அவரது ரசிகர்களும் சைலண்ட் மோடுக்கு வந்துவிட்டனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios