கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு கை கொடுக்கும் வகையில், பிரபலங்கள் தங்களால் முத்த உதவியை  முதல்வர் நிதிக்காக கொடுத்து வருகிறார்கள்.

ஏற்கனவே பிரபல தெலுங்கு நடிகர்கள் பவன் கல்யாண், அவர்களால் முடிந்த ஆந்திர மற்றும் தெலுங்கானா மாநிலத்திற்கு ஒரு கோடியையும், பிரதமர் நிதிக்கு ஒரு கோடி என இரண்டு கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.

இவரை தொடர்ந்து பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த நிதி உதவி செய்து வருகிறார்கள்.  அந்த வகையில், பிரபல நடிகர் மகேஷ் பாபு முதல்வரின் நிதிக்கு ரூ. 1 கோடி நிதி வழங்கி உள்ளார்.

இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மகேஷ்பாபு கூறியுள்ளதாவது, கொரோனா பிரச்சினைக்காக அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகள் மிகவும் பாராட்டுக்குரியது. இதற்கு தன்னால் முடிந்த உதவியை செய்துள்ளேன். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் முதலமைச்சர் நிவாரண நிதிக்காக ஒரு கோடி ரூபாயை அளிக்கிறேன். மற்றவர்களும் முடிந்தவரை நிதி அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொருவரின் நிதியும் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும்.  

அதேபோல் ஒரு பொறுப்பான குடிமகனாக.  ஊரடங்கு உத்தரவை மதித்து நடந்து கொள்ள வேண்டும். நம்மையும் நம்மைச் சார்ந்து இருப்பவர்களையும் பாதுகாக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.