’அனைவரும் ஓட்டுப்போடவேண்டியது மிக மிக அவசியம். தேர்தல் திங்களன்று வந்திருக்கிறதே. அதனால் சனி, ஞாயிறு, திங்கள் என்று நீண்ட விடுமுறையை அனுபவிக்க நினைக்காதீர்கள்’ என்று நடுவிரலைக் காட்டிப் பரிகாசம் செய்கிறார் இன்று மும்பையில் வாக்களித்த நடிகர் மாதவன்.

ஏற்கனவே மூன்று கட்ட வாக்குபதிவுகள் முடிந்திருக்கும் நிலையில்,   இன்று(ஏப்.29) நான்காம் கட்ட ஓட்டுப்பதிவு 9 மாநிலங்களில் 72 தொகுதிகளுக்கு நடக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 17 தொதிகளும் அதில் அடக்கம்.மும்பை மாநகரத்தில்  மும்பை வடக்கு, மும்பை வடகிழக்கு, மும்பை மத்திய வடக்கு, மும்பை வடமேற்கு, மும்பை தெற்கு, மும்பை தெற்கு மத்திய தொகுதி உள்ளிட்ட தொகுதிகளிலும் நடைபெறுகிறது. அதனால், தொகுதி பாலிவுட்டிச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் ஓட்டளித்து வருகின்றனர்.

காலை முதலே பல சினிமா பிரபலங்கள் அவரவர் தொகுதிகளில் வாக்களித்து வருகின்றனர். தமிழ் மற்றும் ஹிந்தி நடிகரான மாதவன் அவரது மனைவியுடன் bmw k1600 பைக்கில் அவரது ஓட்டளித்துள்ளார். தான் வந்த பைக்கில் அமர்ந்தபடியே அனைவரும் வாக்களிக்கும்படி ட்விட் போட்டுவந்த மாதவன் கூடவே ஒரு குட்டி வீடியோவும் வெளியிட்டார். அதில் ஓட்டுப்போடாமல் விடுமுறை எடுத்து ஜாலியாக சுற்ற நினைப்பவர்களுக்கு நடுவிரலைக் காட்டி நாசம் செய்தார்.

அந்த வீடியோ தற்போது வலைதளங்களில் படுவேகமாக வைரலாகி வருகிறது. இன்னொரு முக்கிய சமாச்சாரம் மாதவன் மனைவியுடன் ஒய்யாரமாக அமர்ந்து போஸ் கொடுக்கிறாரே அந்த பைக்கின் விலை வெறும் முப்பதே லட்சம்தானாம்.