தற்போது இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிரபல நடிகரான தியாகராஜன் கைப்பற்றியுள்ளார்.

இந்தியில் அயுஷ்மான் குர்ரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் 2018ம் ஆண்டு வெளியான‘அந்தாதுன்’ திரைப்படம் 2018-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. பிளாக் ஹீமர் படமான இதை ஸ்ரீராம் ராகவன் இயக்கியிருந்தார். வசூல் மற்றும் வரவேற்பு ரீதியாக மட்டுமின்றி சிறந்த இந்தி திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை ஆகிய பிரிவுகளின் கீழ் அந்தாதுன் படத்திற்கு 3 தேசிய விருதும் கிடைத்தது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred


தற்போது இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிரபல நடிகரான தியாகராஜன் கைப்பற்றியுள்ளார். தனது மகன் பிரசாந்தை ஹீரோவாக வைத்து அந்தாதுன் படத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ளார். முதலில் தெலுங்கு ரீமேக் படங்களுக்கு புகழ் பெற்ற மோகன் ராஜா இந்த படத்தை இயக்குவதாக முடிவானது. ஆனால் அவர் இந்த படத்தில் இருந்து விலகியதை அடுத்து, ஜோதிகா நடிப்பில் பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை இயக்கி ஜே.ஜே.பிரட்ரிக் இயக்க உள்ளார். 

இந்நிலையில் தற்போது அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்கில் தபு கதாபாத்திரத்தில் நடிக்க இடையழகி சிம்ரன் ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்த தகவலை உறுதி செய்துள்ள சிம்ரன், இந்த கதாபாத்திரம் தனக்கு நிச்சயம் பெயர் வாங்கி கொடுக்கும் என்றும், மீண்டும் பிரசாந்த் உடன் இணைந்து பணியாற்ற காத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார். தற்போது அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தி ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் இசைமையக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.