தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் நடைபெற உள்ளது. இந்த முறை அதிமுக, திமுக, அமமுக, மநீம, நாம் தமிழர் என ஐந்துமுனை போட்டி நிலவுவதால் தேர்தல் களம் அனல் பறக்கிறது. அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்கள் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்ய துவங்கிவிட்டனர்.

தமிழக துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன், டிடிவி தினகரன் என ஆளுக்கு ஒரு பக்கம் தங்களுடைய ஆதரவாளர்களுக்காக தீவிர பிரச்சாரம் செய்து, தங்களது தேர்தல் அறிக்கை குறித்து மக்களிடம் கூறி வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

மேலும் பிரபலங்கள் சிலரும், தங்களுடைய ஆதரவு கட்சிக்கு விரைவில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்து வரும் நிலையில், தற்போது பிரபல நடிகரும், 'மனித உரிமை காக்கும் கட்சியின்' நிறுவன தலைவர் நடிகர் கார்த்திக். தன்னுடைய கட்சியின் சார்பாக பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது, நடைபெறும் 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கூட்டணிக்கு, தனது முழு ஆதரவை தெரிவிக்க உள்ளதாகவும், நடைபெறும் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.