அமீர் இயக்கத்தில் பருத்திவீரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்த கார்த்தி, தற்போது தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். அண்ணன் சூர்யாவின் படத்தைப் போலவே, சிறுத்தை படத்திற்கு பிறகு கார்த்திக்கும் தெலுங்கில் தனி மார்க்கெட் உருவாகியுள்ளது. சமீபத்தில்  வெளியான கைதி, தம்பி படங்களும் கார்த்திக்கு வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல படங்களாகவே அமைந்தன. 

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான “ரெமோ” படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாக்யராஜ் கண்ணன் இயக்க வரும் படம் சுல்தான்.  கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் படம் இந்த படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. கொரோனா லாக்டவுன் காரணமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது தமிழக அரசு படப்பிடிப்புகளை தொடங்கியுள்ளதால், அதற்கான வேலையில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. 

அந்த படத்தை முடித்த கையோடு விஷால், அர்ஜுனை வைத்து இரும்புத்திரை என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குநர் பி.எஸ்.மித்ரன் உடன் கார்த்தி ஜோடி சேரப்போவதாக கூறப்பட்டது. ஆனால் அது முற்றிலும் உண்மை இல்லை என்பது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே கார்த்தியை வைத்து கொம்பன் என்ற வெற்றிப் படத்தை கொடுத்த முத்தையா இயக்கத்தில் தான் அடுத்து கார்த்தி நடிக்க உள்ளாராம். அந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளனர்.