கொரோன வைரஸின் தாக்கம் தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், நடிகர் கமலஹாசன் தொடர்ந்து, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், வீடியோ மற்றும், ட்விட்டர்  பதிவிட்டு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்.

ஏற்கனவே, பாரத பிரதமர் மோடி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது குறித்து,  உயிர் காக்க 21 நாட்கள் உள்ளிருக்க சொல்லும் நேரத்தில்,அணிசேரா தொழிலாளர்கள் எங்ஙனம் பசியாறுவர் என்பதையும் கவனத்தில் கொள்க.

 

பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல. இந்திய நிதிநிலையை என்றும் காத்தவன் சிறுதொழில் செய்பவனே.

அவனை உதாசீனித்தவர் பதவி இழப்பர். இது சரித்திரம். என்று, ஏழைகள் படும் பாட்டினை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறி இருந்தார். 

இதை தொடர்ந்து தற்போது அரசு அனுமதி கொடுத்தால், தன்னுடைய வீட்டையே மருத்தும மனையை மாற்றி உதவி செய்ய தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பதிவிட்டுள்ள, "இந்த நெருக்கடி நேரத்தில் எளியோருக்கு பணி செய்ய மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மருத்துவர்களை கொண்டு, என் வீடாக இருந்த கட்டிடத்தை, தற்காலிகமாக எளிய மக்களுக்கான மருத்துவ மய்யமாக்கி,மக்களுக்கு உதவ நினைக்கிறேன. அரசின் அனுமதி கிடைத்தால்,அதை செய்ய தயாராக காத்திருக்கிறேன். என ட்விட் போட்டுள்ளார்.