Asianet News TamilAsianet News Tamil

மூன்று மணிநேரம் நடந்த விசாரணை! செய்தியாளர்களிடம் பகிர்ந்த கமல்!

கடந்த மாதம் 19ம் தேதி, சென்னை பூந்தமல்லி அருகே உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் இந்தியன் 2 படத்தின் இரவு படப்பிடிப்பின் போது பிரமாண்ட லைட்டின் சுமையை தாங்க முடியாமல், கிரேன் கீழே சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
 
actor kamalhassan speech about Indian 2 accident investigation
Author
Chennai, First Published Mar 3, 2020, 4:17 PM IST

கடந்த மாதம் 19ம் தேதி, சென்னை பூந்தமல்லி அருகே உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் இந்தியன் 2 படத்தின் இரவு படப்பிடிப்பின் போது பிரமாண்ட லைட்டின் சுமையை தாங்க முடியாமல், கிரேன் கீழே சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், கிருஷ்ணா, மது, சந்திரன், என்கிற மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் படக்குழு பணியில் ஈடுபட்டிருந்த 9 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

actor kamalhassan speech about Indian 2 accident investigation

இந்நிலையில், இந்த விபத்து குறித்து சமீபத்தில் இயக்குனர் ஷங்கரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மூன்று மணிநேரம் விசாரணை மேற்கொண்ட நிலையில், தற்போது நடிகர் கமலஹாசனிடமும் தொடர்ந்து 3 மணி நேரம் விசாரணை நடைபெற்றுள்ளது.

actor kamalhassan speech about Indian 2 accident investigation

இந்த விசாரணைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் நடிகர் கமல்ஹாசன்.  அப்போது பேசிய அவர், தனக்கு தெரிந்த விவரங்களை காவல்துறையினரிடம் தெரிவித்ததாகவும், இதுபோன்ற விபத்து இனி ஏற்படக் கூடாது என்பதற்காக எடுக்கும் முதல் முயற்சியாகவே இந்த சந்திப்பை கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.

actor kamalhassan speech about Indian 2 accident investigation

மேலும் இதுபோன்ற விபத்து நடக்காமல் தவிர்க்க காவல்துறை தரப்பில் ஏதாவது பரிந்துரைகள் இருப்பின் தெரிவிக்கலாம் என்றும் அதையும் நாங்கள் பரிசீலிக்க தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளதாகவும், கூடிய விரைவில் திரைத்துறையை சார்ந்த அனைவரும் ஒன்று கூடி இது குறித்த விபரங்களை அனைவருக்கும் தெரிவிக்க தயாராக இருப்பதாக கமலஹாசன் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios