கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் தமிழகத்தில், அதிகரித்து வரும் நிலையில், அதில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக, தன்னார்வலர்களும், பிரபலங்களும், கட்சியின் சார்பிலும், மக்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் தற்போதைக்கு மக்களின் உயிரை காத்து வரும் கவசமான மாஸ்க், சானிடைசர் போன்றவற்றின் தேவை அதிகமாக இருப்பதால், கட்சிகளின் சார்பில் இது போன்ற பொருட்கள் கொடுக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில், உலக நாயகன் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம்  சார்பாக 15 ,௦௦௦ மாஸ்குகள் வழங்கப்பட்டு, அதற்கான ரசீது பெற்று வரப்பட்டுள்ளது. இது குறித்த ஒரு புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மக்கள் பணி பற்றி சமூக வலைத்தளத்தில், பேசி வரும் நடிகர் கமலஹாசன், இது போன்ற சிறு விஷயங்களுக்கு கணக்கு பார்க்கலாமா என இவருடைய அபிமானிகளை நினைக்க வைத்துள்ள இந்த சிறு துண்டு ரசீது பேப்பர்.எனினும் உதவியின் அளவு முக்கியமில்லை என்றாலும், தக்க சமயத்தில் இது போன்ற உதவிகளை மக்கள் நீதி மய்யம் செய்தது பாராட்டுக்குரியது.  இந்த ரசீதை மட்டும் தவிர்த்திருக்கலாம் என்று சிலர் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.