கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னுடைய 'மக்கள் நீதி மய்யம் சார்பாக பல்வேறு உதவிகளை செய்து வரும் அந்த கட்சியின் தலைவரும் நடிகருமான உலக நாயகன் கமலஹாசன் உருக்கமான, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது... "தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில், " நாங்கள் இருக்கிறோம் உதவிட,  என முன்வந்து, எளிய மக்கள் இந்த ஊரடங்கில் பாதிக்கப்படாமல் காத்திட கட்சி பேதமின்றி, நாம் பணி செய்ய வேண்டும் என்கிற என் குரலுக்கு செவி சாய்த்து,  தமிழகமெங்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசுடன் இணைந்தும், தனியாகவும் அயராது கலைப்பணியாற்றிக் கொண்டிருக்கும்  மக்கள் நீதி மய்யத்தினர் அனைவருக்கும் வணக்கம்.ஊரடங்கு, தொற்று நோய் ஒரு பக்கம், தொழில் என்னவாகும், வேலை நிலை,  சம்பளம் வருமா,  அரசு நமக்கு உதவி செய்யுமா என்ற ஏகப்பட்ட கேள்விகள் மனதில் இருந்தும்,  ஊரடங்கு அறிவிக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே களத்தில் இறங்கியிருக்கும் உண்மையான மனிதத்தின் முகங்கள் நீங்கள். 

ஏழை எழிய மக்களுக்கு உணவு பொருட்கள் தருவது, சாலையோரம் வசிப்போருக்கு, உணவு வழங்குவது, நியாயவிலை கடைகளில்  சமூக விலகியிருத்தலை மக்களுக்கு அறிவுறுத்தி அவர்கள் நெறிப்படுத்துவது, தூய்மை பணியாளர்கள் காவல்துறை ஊழியர்கள் ஆகியோருக்கு உதவுவது என ஒவ்வொரு வரும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பணியைச் செய்து வருகிறீர்கள்.

தனது கல்யாண மண்டபத்தை மாநகராட்சிக்கு கொடுத்த நிர்வாகியையும்,  ஒவ்வொரு நாளும் 10 கிலோ அரிசியும் உதவியாக தரும் நிர்வாகியும் எனக்கு தெரியும். அவர்களின் பலரிடம் பேசியும் இருக்கிறேன்.மக்கள் நீங்கள் நீதி மையம் என்ன செய்தது, எனக் கேட்கும் சிலரின் வாதத்திற்கு மக்கள் பதில் உரைப்பார்கள்.  உங்களின் நேரத்தையோ,  நோக்கத்தையோ ,  அவர்கள் பக்கம் திசை திருப்பி விடாதீர்கள். 

 நமது பணி மக்கள் பணி மட்டும்தான்.

உதவி செய்யும் போது ஊடகங்களை அழைத்து சென்று விளம்பரப்படுத்துவது, அல்லது உணவு பொருட்களின் மேல் சின்னத்தையும், தலைவர் படத்தை ஒட்டி விளம்பர படுத்துவதையோ... மக்கள் நீதி மய்யம் செய்யாது.  அது நம் அரசியல் அல்ல.  நாம் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.

இந்த நேரத்தில் உங்களிடம் இன்னொரு கோரிக்கையையும் வைக்க விரும்புகிறேன்.  நீங்கள் உதவி வழங்க செல்லும் இடத்தில் உதவி பொருட்களுடன் நீங்கள் இருக்கும் புகைப்படத்தை மட்டும் பதிவு செய்யுங்கள். உங்களிடம் உதவி பெறுபவர்கள் புகைப்படம் எடுப்பதை தயவு செய்து தவிர்த்து விடுங்கள். வாழ்வாதாரம் நசித்துப் போய், உள்ளம் வெம்பி இருக்கும் இருக்கும் எளிய மக்களை நீங்கள்  எடுக்கும் படம் காயப்படுத்தி விடலாம். உணவளித்து, உதவும் நோக்கில் அவர்கள் சுயமரியாதை பாதித்து உள்ளத்தை புண்ணாக்கும் செயல் நமது இருக்கவேண்டாம். கரம் கோர்ப்போம் உதவிட உள்ளத்தையும் தன்மானத்தையும் காயப்படுத்தாமல்.

பொருளாதார பாதிப்பு ஒரு பக்கம், வேலை தொழில் வாழ்வாதார பயம் இன்னொரு பக்கம். என உலகம் முழுவதும் ஸ்திரதன்மை  இன்றி இருக்கப் போகும் நேரத்தில் சகமனிதன் மீதான அன்பை அன்பே நம்மை இணைக்க போகிறது அன்பு கொண்டு நம்பிக்கையுடன் முன்னேறுவோம். என்று நடிகர் கமலஹாசன் தற்போது விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.