actor kali venkat marriage

நடிகர் காளி வெங்கட்டுக்கும் சென்னையைச் சேர்ந்த ஜனனி என்பவருக்கும் நேற்று கோவிலில் மிகவும் சிம்பிள்ளாக நடந்து முடிந்தது திருமணம்.

ஒரு நடிகராகியே வேண்டும் என ஊரை விட்டு ஓடி வந்து காய்கறிச் சந்தையில் வேலை பார்த்து மிகவும் கஷ்டப்பட்டு நடிகனாக உயர்ந்த காளி வெங்கட்... 'தெகுடி' , 'கொடி', 'முண்டாசுப்பட்டி' , 'ராஜா மந்திரி' போன்ற படங்களில் எதார்த்தமான நடிப்பால் கலக்கி இருப்பர்.

35 வயதைக் கடந்தும் திருமணம் ஆகவில்லையே என தன்னுடைய வருத்தத்தைக் கூட மிகவும் ஜாலியாக பல மீடியாக்களில் சொல்லி சிரித்துக்கொள்வர்.

இந்நிலையில் இவருக்கும் ஜனனி என்ற பெண்ணுக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன், நேற்று திருப்போரூரில் உள்ள முருகன் கோவிலில் மிகவும் சிம்பிள்ளாக திருமணம் நடந்தது. இதில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.