இயக்குனர் பா.ரஞ்சித், 'அட்டகத்தி' படத்தை தொடர்ந்து இயக்கிய சூப்பர் ஹிட் திரைப்படம் 'மெட்ராஸ்'. இந்த படத்தில், நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக நடிகை கேத்தரின் தெரசா நடித்தார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், கலையரசன், ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் நடிகர் கார்த்தி கமிட் ஆவதற்கு முன்பு, இயக்குனர் பா.ரஞ்சித் முதலில் அணுகிய நடிகர் 'ஜீவா' தானாம். ஆனால் அப்போது கால் ஷீட் பிரச்சனை காரணமாக இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாக பீலிங்ஸ்சோடு, பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகர் ஜீவா.

இவரின் கால்ஷீட் கிடைக்காத பின்பு தான், நடிகர் கார்த்தியிடம் இந்த படத்தின் கதையை கூறியுள்ளார் ரஞ்சித். படத்தின் கதை வித்தியாசமாகவும், மனதை கவரும் விதத்தில் இருந்ததால், உடனடியாக கார்த்தி இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இப்படம் கார்த்தியின் திரைவாழ்வில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது .