சிம்புவின் நடிப்பில் இந்த மாதம் வெளியான 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாமல் தோல்வியை தழுவியது. 

இந்த நிலையில், தற்போது அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார் சிம்பு. இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ள 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

தற்போது இந்த படத்தில் நடிக்க நடிகர், நடிகையர் தேர்வு மும்புரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இப்போது இந்த படத்தில், நடிகர் ஜெய் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

ஏற்கனவே சிம்புவுடன் ஜெய் 'வேட்டை மன்னன்' என்ற படத்தில் நடிக்கவிருந்தார் ஜெய். ஆனால் அந்த படம் திடீர் என ட்ராப் ஆனதால் இருவரும் இணைந்து நடிக்க முடியவில்லை. ஆனால் தற்போது 'மாநாடு' படத்தில் ஜெய் மற்றும் சிம்பு இணைந்து நடிக்க உள்ளனர். 

சிம்புவுக்கு ஜோடியாக ராஷிகண்ணா நடிக்கவிருக்கும் இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.