actor g.v.prakash and karu pazhaniyappan participate the neduvaasal protest

தமிழர்களில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை மீட்க களத்தில் இறங்கி மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் ஆதரவாக தொடர்ந்து போரட்டம் மூலம் குரல் கொடுத்தவர் இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ்.

மேலும் ஜல்லிக்கட்டுக்காக ஒரு பாடலையும் வெளியிட்டார், அதே போல் தற்போது நெடுவாசலுக்கு ஆதரவாக ஒரு பாடலையும் வெளியிட போவதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் வாயு எடுக்க கூடாது என்று தொடர்ந்து அறவழியில் 18வது நாளாக போராடி வரும் நெடுவாசல் மக்களுக்கு ஆதரவாக போராட்ட களத்தில் குதித்துள்ளார் ஜி.வி.பிரகாஷ் மற்றும் இயக்குனர் கரு.பழனியப்பன்.

போராட்டக்காரர்கள் ஓ.என்.ஜி.சி. அளித்த விளக்கங்களை ஏற்க முடியாது எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.

மாநில அரசு சொன்னாலும், மத்திய அரசு உறுதியான அறிவிப்பை வெளியிட்டால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று நெடுவாசல் மக்கள் உறுதியாய் போராட்டத்தை தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.