actor dilip in Aluwa jail

நடிகை பாவனா பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட மலையாள நடிகர் திலிப்பை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க கொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை பாவான, கடந்த பிப்ரவரி மாதம் மர்ம நபர்களால் காரில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் நடிகை பாவனாவின் கார் டிரைவர் மார்ட்டின், முன்னாள் கார் டிரைவர் 'பல்சர்' சுனில், வினீஸ் உட்பட ஆறு பேரை கேரள போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் மலையாள நடிகர் திலீப், தூண்டுதலின் பேரில் பாவனாவை கடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து நடிகர் திலீப் , அவரது மனைவி காவ்யா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்கள் தேடப்பட்டு வந்த நிலையில், நேற்று திலீப்பிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

காலை முதல் நடத்தப்பட்ட விசாரணையில் பாவனா பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்ற சதியில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து நடிகர் திலீப்பை போலீசார் கைது செய்தனர். 

இதையடுத்து இன்று அதிகாலை கொச்சி அங்கமாலியில் நீதிபதி முன் திலீப் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அலுவா நீதிமன்ற அடைக்கப்பட்டார். அவரை நாளை காவலில் எடுத்து விசாரிக்க கேரள போலீசார் முடிவு செய்துள்ளனர்.