கடந்த வருடம் பிப்ரவரி 17 ஆம் தேதி பிரபல மலையாள நடிகையை 4 பேர் காரில் கடத்தி, பாலியல் தொந்தரவு செய்த விவகாரத்தில் பிரபல மலையாள நடிகர் திலீப்பின் பெயரும் அடிப்பட்டது. 

இரண்டு கட்ட விசாரணைக்குப் பிறகு இந்த சம்பவத்தில் திலீப்பிற்கு தொடர்பு உள்ளதாக கூறப்பட்ட நிலையில் போலீசார் இவரை சந்தேகத்தின் அடிப்படியில் கைது செய்தனர். இந்த சம்பவம் கேரள திரையுலகத்தையே பரபரப்பில் ஆழ்த்தியது.  

மலையாள திரையுலகை சேர்ந்த சில நடிகர்கள் திலீப்பிற்கு ஆதரவு தெரிவித்தாலும், இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல முன்னணி நடிகைகள் போர் கொடி தூக்கினர். 

இதனால் நடிகர்கள் அவசரமாக கூடி, நடிகர் திலீபை மலையாள நடிகர் சங்கமான அம்மாவிலிருந்து நீக்குவதாக அறிவித்தனர். 

இந்நிலையில் பாலியல் தொந்தரவுக்கு ஆளான நடிகையின் வழக்கில் இதுவரை திலீப் குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார் என அவர் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து  திலீப்பிடம் எந்த விளக்கம் மலையாள நடிகர் சங்கம் கேட்க வில்லை என கூறப்படுகிறது.  

அம்மாவின் புதிய பொதுச்செயலாளர் இடவேள பாபு, திலீபை சங்கத்திலிருந்து நீக்கியதில் விதிமீறல் உள்ளது என்றும். அதனாலேயே அவர் மீண்டும் சங்கத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டார் என்று  கூறப்படுகிறது. 

நடிகர் மோகன்லால் கடந்த சமீபத்தில் தான் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், திலீப் மறுபடியும் சங்கத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறார். 

இதனால் மிகவும் கோபம் அடைந்துள்ள பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான நடிகை பாவனா, ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கள், கீத்து மோகன்தாஸ் உள்ளிட்ட 4 நடிகைகள் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து அதிரடியாக விலகுவதாக அறிவித்துள்ளனர்.