Asianet News TamilAsianet News Tamil

’தேசிய விருது கிடைத்தால் துள்ளிக் குதிப்பதும் இல்லை. கிடைக்காவிட்டால் அதை நினைத்துத் துடிப்பதும் இல்லை’...விருதுக் கமிட்டியை விளாசிய தனுஷ்...

’வெற்றிமாறன் இயக்கத்தில் நான் நடித்த ‘வட சென்னை’படத்துக்கு தேசிய விருது கிடைக்கவில்லை என்று ஏகப்பட்ட பேர் ஆதங்கப்பட்டார்கள். அந்தப் படத்திற்கு விருது கிடைக்கவேண்டும் என்று மக்கள் நினைத்தார்களே அந்த விருதே போதும். என் படத்திற்கு தேசிய விருது கிடைத்தால் துள்ளிக் குதிப்பதும் இல்லை. கிடைக்காவிட்டால் அதை நினைத்துத் துடிப்பதும் இல்லை’என்கிறார் நடிகர் தனுஷ்.
 

actor dhanush speaks about national award
Author
Chennai, First Published Aug 29, 2019, 11:42 AM IST

’வெற்றிமாறன் இயக்கத்தில் நான் நடித்த ‘வட சென்னை’படத்துக்கு தேசிய விருது கிடைக்கவில்லை என்று ஏகப்பட்ட பேர் ஆதங்கப்பட்டார்கள். அந்தப் படத்திற்கு விருது கிடைக்கவேண்டும் என்று மக்கள் நினைத்தார்களே அந்த விருதே போதும். என் படத்திற்கு தேசிய விருது கிடைத்தால் துள்ளிக் குதிப்பதும் இல்லை. கிடைக்காவிட்டால் அதை நினைத்துத் துடிப்பதும் இல்லை’என்கிறார் நடிகர் தனுஷ்.actor dhanush speaks about national award

தந்தை,மகன், சகோதரன் ஆகிய மூன்று கெட் அப்களில் தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அசுரன்’. வெற்றி மாறன் இயக்கியுள்ள இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர்.

அவ்விழாவில் தனுஷ் பேசும்போது, ‘அசுரன் படத்தைப் பொறுத்தவரைக்கும் நம்பிக்கை தான் முக்கியமா இருக்கு. வெற்றிமாறன் தான் இயக்குநர் என்று தாணு சாரிடம் சொன்னதும் அவர் கதையே கேட்காமல் ஓ.கே சொன்னார். அந்த நம்பிக்கை ரொம்ப முக்கியமானது. நான் நடிப்பதற்கு எப்போதுமே  வெற்றிமாறன் நிறைய கண்டெண்ட் கொடுப்பார். actor dhanush speaks about national award

இந்தக் கதாப்பாத்திரம் என் 36 வயதில் கிடைத்திருப்பது பெரிய கொடுப்பனை. வேற எந்த நடிகருக்கும் அது கிடைக்குமா என்று தெரியவில்லை. இந்தப்படம் ஒரு முக்கியமான படமாக கண்டிப்பாக இருக்கும். மிகவும் மகிழ்ச்சியுடன் நான் நடித்த படம் இது. வெற்றிமாறனும் அவர் டீமும் எனக்கு நல்ல ப்ளாட்ஃபார்ம் கொடுத்திருக்காங்க. மஞ்சுவாரியாரின் டேலண்ட் எனக்குப் பிடிக்கும். அவரோடு நடிக்க வேண்டும் என்பது ரொம்ப நாள் ஆசையாக இருந்தது. அது இந்தப் படத்தில் நிறைவேறியதில் மகிழ்ச்சி.

கருணாஸின் மகன் கென்னுக்கு கான்ஃபிடண்ட் அதிகம். டி.ஜே பாடியே நம்மை கரெக்ட் பண்ணிருவான். இப்ப இருக்குற இளைஞர்களிடம் நிறைய திறமை இருக்கிறது. ஜிவி பிரகாஷோடு வேலை பார்ப்பது ஜாலியா இருக்கும். மண் சார்ந்த இசையை இப்படத்திற்கு கொடுத்திருக்கிறார்.’வடசென்னை’ படம் தான் வெற்றிமாறனின் பெஸ்ட் என்று நினைத்தேன். ஆனால் ’அசுரன்’ தான் அவரின் பெஸ்ட்டாக இருக்கும்.‘வட சென்னை’படத்துக்கு தேசிய விருது கிடைக்கவில்லை என்று ஏகப்பட்ட பேர் ஆதங்கப்பட்டார்கள். அந்தப் படத்திற்கு விருது கிடைக்கவேண்டும் என்று மக்கள் நினைத்தார்களே அந்த விருதே போதும். என் படத்திற்கு தேசிய விருது கிடைத்தால் துள்ளிக் குதிப்பதும் இல்லை. கிடைக்காவிட்டால் அதை நினைத்துத் துடிப்பதும் இல்லை’என்று கச்சிதமாகப் பேசினார் தனுஷ். 

Follow Us:
Download App:
  • android
  • ios