’வடசென்னை’படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் எண்ணம் அப்படியேதான் உள்ளது. அப்படம் கைவிடப்பட்டதாக பரப்பப்படும் செய்திகளில் துளியும் உண்மை இல்லை’என்று தனது ட்விட்டர் பதிவில் மறுப்புத் தெரிவித்திருக்கிறார் நடிகர் தனுஷ்.

வெற்றிமாறனுடன் ‘அசுரன்’படப்பிடிப்பின் இறுதிக்கட்டப்பணிகளில் இருக்கும் தனுஷ் அடுத்து நடிக்க இருக்கும் படங்களின் பட்டியல் என்ற பெயரில் அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படம் என்பது உட்பட ஐந்தாறு படங்களின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. ஆனால் அந்தப் பட்டியலில் ‘வட சென்னை2’படம் குறித்து எந்தத் தகவலும் இல்லை. இதை ஒட்டி ‘வட சென்னை 2’படம் கைவிடப்பட்டுவிட்டது. முதல் பாகத்துக்கே ஏகப்பட்ட எதிர்ப்புகள் இருந்ததால் இரண்டாம் பாகத்தை எடுக்க வெற்றிமாறன் விரும்பவில்லை என்ற தகவல்கள் பரவின.

அச்செய்தியால் அதிர்ச்சி அடைந்த தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில்,.. எதை ஆதாரமாக வைத்துக்கொண்டு ‘வட சென்னை2’ டிராப் ஆகிவிட்டது என்று என் ரசிகர்களைக் குழப்புகிறார்கள் என்று தெரியவில்லை. அப்படத்தை நாங்கள் கைவிடவேண்டிய அவசியம் இல்லை.இனிமேல் எந்து ட்விட்டர் பக்கத்தில் வரும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் தவிர்த்து எதையும் என் ரசிகர்கள் நம்பவேண்டாம்’ என்று சற்று கோபமாகவே பதிவிட்டிருக்கிறார் தனுஷ்.