Captain Miller Trailer : பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் வருகின்ற ஜனவரி 12ம் தேதி பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
பிரபல இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் உள்ளிட்ட பலர் நடித்து விரைவில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் கேப்டன் மில்லர். இலங்கை ராணுவத்தை சேர்ந்த ஒரு போர் வீரரின் கதையை தழுவி இந்த வரைபடம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த திரைப்படம் வெளியாகும் இன்று பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த 2024 ஆம் ஆண்டு பொங்கல் தின ரேஸில் இறங்கி உள்ளது கேப்டன் மில்லர் திரைப்படம். தனுஷ் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது இப்படம்.
குறிப்பாக ஜெயிலர் படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்தது போல இல்லாமல், கன்னட உலகின் சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார் என்பது வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இந்த திரைப்படத்திலிருந்து லிரிகள் வீடியோக்களும், பாடல்களும் வெளியாகி வரும் நிலையில் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது.
இப்படத்தில் நாயகன் நடிகர் தனுஷ் இப்பொது வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில் நாளை ஜனவரி 6ஆம் தேதி சனிக்கிழமை இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாக உள்ளதாக கூறியுள்ளார். ஆனால் கேப்டன் மில்லர் படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் நேரம் இன்னும் பட குழுவால் அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
