actor dhanuj feeling words for mother
பிரபல நடிகர் தனுஜ் மகஷாப்தேவின் அம்மா, சமீபத்தில் தான் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். தற்போது தன்னுடைய அம்மாவை "மீண்டும் வந்துவிடு அம்மா" என இவர் உருக்கமாக கூறியுள்ளது ரசிகர்கள் மனதையே உருக்கும் விதத்தில் உள்ளது.
பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் தனுஜ்.
இவர் தாரக் மேத்தா என்ற தொலைக்காட்சி தொடரில் கிருஷ்ணன் சுப்ரமணியன் ஐயர் என்ற தென்னிந்தியர் கதாப்பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர்.
இந்நிலையில் தனுஜ்ஜின் தாய் ஷீலா உடல்நலக்குறைவால் சமீபத்தில் தான் மரணமடைந்தார்.
சில காலமாக கல்லீரல் நோயால் அவதிப்பட்டு வந்த இவர், சிகிச்சை பலன் இல்லாமல் மரணமடைந்தார்.
தன்னுடைய அம்மா மீது அளவுக்கடந்த அன்பு வைத்துள்ள தனுஜ்க்கு அவரின் அம்மா மரணம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் தற்போது தன்னுடைய அம்மா மீது வைத்துள்ள பாசத்தில் அழுது உருகிய படி மீண்டும் வந்து விடு அம்மா என கூறியுள்ளார். இது ரசிகர்கள் மனதையே உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது.
