*செம்ம ட்விஸ்ட்டுகள் நிறைந்த குடும்பக் கதை என்றால் பின்னிப் பேர்த்து எடுத்துவிடுவார்  இயக்குநர் கம் நடிகர் கே.பாக்யராஜ். அவரை தனது ‘துப்பறிவாளன்’ படத்தில் வில்லனாக காட்டியிருந்தார் மிஷ்கின். அந்த பாதிப்போ என்னவோ, இப்போது க்ரைம் நாவலிஸ்ட் ராஜேஷ்குமாரின் கதையை படமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். கோயமுத்தூரில் இதற்கான ஆரம்ப ஆலோசனைகள் முடிந்துள்ளன. 
(முரட்டு முருங்கக்காய் ஏதும் உண்டா சார்?)

*கட்டாய வெற்றி சூழ்நிலையில் இருக்கும் சூர்யா தன் படமான ‘சூரரைப் போற்று’ படத்தை தானே செம்ம காஸ்ட்லியாக தயாரித்துள்ளார். இந்நிலையில், வெற்றிமாறனுடன் இவர் இணையும் அடுத்த படமான ‘வாடிவாசல்’ படமானது, ஜல்லிக்கட்டுவை மையமாக வைத்தது என்று தெரிகிறது. வெற்றி, வழக்கம்போல் நாவல் ஒன்றை படமாக்க முடிவெடுத்துவிட்டார். இந்நிலையில் இந்நாவலின் கதையை விரிவாக சமூக வலைதளங்களில் எழுதி, ‘இவ்வளவுதான் சூர்யா படக்கதை’ என்று ஊற்றி மூடிவிட்டனர் சிலர். (ஏய் யாருபா மாட்ட அவுத்துவிட்டது?)

*ஜீவா இயல்பிலேயே கிரிக்கெட் வீரர். விஷால், ஆர்யா, ஜெயம்ரவி, ஜீவா, விஷ்ணுவிஷால், விக்ராந்த் இவர்கள் அத்தனை பேரும் அடிக்கடி மேட்ச் போடுவது வழக்கம். இந்நிலையில் இந்தியில் தயாராகும் ‘83’ கிரிக்கெட் கதை படத்தில் ஜீவாவும் இணைந்துள்ளார். தமிழக வீரர் கிருஷ்ணமாச்சார்யா ஸ்ரீகாந்த்தின் கதாபாத்திரத்தை இவர் ஏற்றுள்ளார். ஃபர்ஸ்ட் லுக் அள்ளுது. (சிக்ஸரா அடிச்சு தள்ளுங்க ஜீவா)

*விக்ரம் வேதா படம் என்னதான் டபுள் ஆக்‌ஷனில் அள்ளினாலும் கூட, அதில் மாதவன் -ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் ஹாட் ஜோடிப் பொருத்தமும் பெரிதாய் சிலாகிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஜோடியானது மீண்டும், ‘மாறா’ எனும் ரீமேக் படத்தில் இணைகிறது. மலையாளத்தில் துல்கரின் ‘சார்லி’தான் மாதவன் வாயால் தமிழ் பேச இருக்கிறது. 
(மாதவ ஏட்டா வரு! வரு!)

*அசுரன் படத்தின் நூறாம் நாள் விழா கொண்டாட்டத்தில் மைக் பிடித்த தனுஷ் ‘இந்தப் படத்தின் ஷூட்டிங்கை அவசரமாக முடித்ததால் வெற்றிமாறனுக்கு ஒரு தயக்கம் இருந்தது. ஆனால் படம் பெரிய ஹிட். அவசரத்தில் பண்ணும் உப்புமாதான் சமயத்தில் சிறப்பாக இருக்கும். ஆனல் இது உப்புமா இல்லை, ஃபுல்மீல்ஸ்.’ என்று சிலாகித்திருக்கிறார். 
(அதான் செம்ம கட்டு கட்டிட்டீங்களே!...நடிப்புல)