Asianet News TamilAsianet News Tamil

விக்ரம் 32 - வை கொண்டாடும் ரசிகர்கள்...மாஸ் வீடியோவை பகிர்ந்து நன்றி சொன்ன சீயான்..

அந்த வீடியோவை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள சியான் தன்னுடைய பயணத்திற்கு உதவிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

actor chiyaan vikram 32 special video
Author
First Published Oct 17, 2022, 5:28 PM IST

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து மின்னுபவர் தான் சியான் விக்ரம். தற்போது நடிகர், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், டப்பிங் கலைஞரின் என பன்முகம் காட்டி வரும் விக்ரம், 55க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தோன்றியுள்ளார். விளம்பர மாடலாக இருந்த இவர் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான கலாட்டா குடும்பம் மூலம் கலைத்துறைக்கு அறிமுகமானார். இந்த தொடர் இவருக்கு என் காதல் கண்மணி படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது.  இந்த படத்தோடு சேர்த்து இவர் நடித்த பல படங்களும் தோல்வியை சந்தித்தது. இதன் பின்னர் தெலுங்கு, மலையாள பக்கம் திரும்பினார்.

ஆனால் தெலுங்கு படங்களும் இவருக்கு போதுமான கை கொடுக்கவில்லை. இதுவும் வேலைக்காகவில்லை. பின்னர் மலையாளத்தில் இரண்டாம் நாயகராக நடித்து வந்தார். இவ்வாறு தனக்கு போதுமான வரவேற்பு எந்த மொழிகளும் கிடைக்காததால் துவண்டு இருந்த விக்ரமிற்கு மிகப்பெரிய பலமாக கிடைத்த படம் தான் சேது. பாலாவின் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்திருப்பார் விக்ரம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு மிகப்பெரிய பெயரை கொண்டு வந்து சேர்த்தது. தொடர்ந்து தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளையும் விக்ரம் பெற்றார்.

மேலும் செய்திகளுக்கு...Happy Birthday Keerthy Suresh : கடாயும் கையுமாய் கீர்த்தி சுரேஷ்...கிச்சன் போட்டோஸ் இதோ

பின்னர் இவர் நடித்த காசி, தூள் உள்ளிட்ட படங்களும் நல்ல வெற்றியை கண்டன. பின்னர் 2002 ஆம் ஆண்டு வெளியான ஜெமினி படம் இவரை ஆக்க்ஷன் நாயகனாக மாற்றியது. இந்த படம் அந்த காலகட்டத்தில் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்று.  மீண்டும் பாலாவுடன் கைகோர்த்த சீயான், பிதாமகன் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் இவருக்கு தேசிய திரைப்பட விருதை பெற்றுக் கொடுத்தது. இதில் சூர்யா, லைலா முக்கி வேடங்களில் நடித்திருந்தனர். மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்ட நபராக நடித்து ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்திருந்தார் விக்ரம்.

actor chiyaan vikram 32 special video
இதன்பின் இவரது காட்டில் மழை தான் அருள், மஜா ஆகிய தொடர்ந்து வெற்றிப்படங்கள் இவர் பக்கம் கிடைத்தன. 2005 ஆம் ஆண்டு வெளியான அந்நியன் படம் விக்ரமின் நடிப்பிற்கு எவரும் ஈடாக முடியாது என்பதை வெளிக் காட்டியது. பின்னர் இராவணன், கந்தசாமி, தெய்வத்திருமகள், ஐ உள்ளிட்ட படங்கள் விக்ரமின் பரிமாணத்தை பிரதிபலித்தன. ஆனால் இருமுகன், கடாரம் கொண்டான், ஆதித்யவர்மன், மகான் உள்ளிட்ட படங்கள் மிதமான வரவேற்புகளையே பெற்றிருந்தது. அதோடு சமீபத்திய விளையாடான கோப்ரா படம் தோல்வியை சந்தித்தது. சமீப காலமாக சறுக்கல்களை சந்தித்து வரும் விக்ரமுக்கு பொன்னியின் செல்வன் மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்ததென்றே கூறலாம்.

மேலும் செய்திகளுக்கு...Andrea Jeremiah : மத்திய அழகை காட்டியபடி...மெல்லிய சேலையில் கவர்ந்திழுக்கும் ஆண்ட்ரியா

சோழ இளவரசன் ஆதித்ய கரிகாலனாக வந்து தென்னிந்திய சினிமா ரசிகர்களை ஆச்சரியத்திற்குள் தள்ளினார் விக்ரம். முன்னதாக விளம்பர படங்களில் நடிக்கையில் சோழ மன்னர் வேடமிட்டு இவர் நடித்திருந்தார் அதன் பின் தற்போது சோழ மன்னராகவே இவர் படங்களில் தோன்றியிருப்பது குறித்து பல மேடைகளில் பெருமிதம் தெரிவித்திருந்தார் விக்ரம். தற்போது இவர் நடிப்பில் பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகம், பா ரஞ்சித்துடன் சியான் 61 உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.

actor chiyaan vikram 32 special video

 கடந்த 1990 ஆம் ஆண்டு திரைத்துறைக்கு வந்த விக்ரம் இந்த ஆண்டுடன் 32 - வது ஆண்டை தொட்டுள்ளார். இவரின் ரசிகர்கள் சியான் 32 என்ற பெயரில் கொண்டாட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அதனை ஒட்டி அவர்கள் விக்ரமின் மாறுபட்ட தோற்றம் கொண்ட காணொளி கிளிப்புகளை கொண்டு வீடியோவையும் உருவாக்கியுள்ளனர். அந்த வீடியோவை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள சியான் தன்னுடைய பயணத்திற்கு உதவிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios