சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர் சிரஞ்சீவியுடன் வந்த 50 வயதிற்கு குறைவான இளம்பெண்ணை சாமி தரிசனம் செய்ய அனுமதித்ததாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து தேவசம் போர்டு விளக்கம் அளித்துள்ள்து.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர் சிரஞ்சீவியுடன் வந்த 50 வயதிற்கு குறைவான இளம்பெண்ணை சாமி தரிசனம் செய்ய அனுமதித்ததாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து தேவசம் போர்டு விளக்கம் அளித்துள்ள்து.
மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை கடந்த 12-ந் தேதி திறக்கப்பட்டது. பின்னர், 13-ந் தேதி முதல் வழக்கமான பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வந்தது. 5 நாள் சிறப்பு பூஜைகளுக்கு பின் சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று அடைக்கப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த 13 ஆம் தேதியன்று பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, அவரது மனைவி மற்றும் பீனிக்ஸ் குரூப் உரிமையாளரகளான சுக்கப்பள்ளி சுரேஷ், சுக்கப்பள்ளி கோபி அவர்களது மனைவிகளும் சபரிமலை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர்.இந்நிலையில் இவர்களில் 50 வயதை எட்டாத மதுமதி என்பவரை சாமி தரிசனத்திற்கு அனுமதித்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி, கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.இதற்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தேவஸ்தான தலைவர் அனந்தகோபன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மதுமதி என்பவர் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தது உண்மை. அவர் 1966-ம் ஆண்டு பிறந்தவர். சபரிமலை ஆசார முறைப்படி அவர் 50 வயதை கடந்தவர். அடையாள அட்டை மற்றும் ஆவணங்களை பரிசோதனை செய்த பின்னரே அவர் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான செய்திகள் தவறானது. தவறான செய்திகள் வெளியிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மதுமதியின் மகன் அவிநாஷ் சுக்கப்பள்ளி தனது முகநூலில் எனது தாயாருக்கு 55 வயதாகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
