Asianet News TamilAsianet News Tamil

தன்னுடைய பெயரில் மோசடி... நடிகர் சார்லி காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்..!

தமிழ் சினிமாவில், காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராக அறியப்பட்ட நடிகர் சார்லி, ட்விட்டர் பக்கத்தில் இணைந்துள்ளதாக போலி கணக்கு தொடங்கப்பட்டதை தொடர்ந்து,  நடிகர் சார்லி காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.
 

actor chalie give police compliant for twitter issue
Author
Chennai, First Published Jun 11, 2021, 6:46 PM IST

தமிழ் சினிமாவில், காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராக அறியப்பட்ட நடிகர் சார்லி, ட்விட்டர் பக்கத்தில் இணைந்துள்ளதாக போலி கணக்கு தொடங்கப்பட்டதை தொடர்ந்து,  நடிகர் சார்லி காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்: ச்சீ! என்ன கன்றாவி டிரஸ் இது... மேலாடை அணிவதில் மிதமிஞ்சிய கவர்ச்சி காட்டி ரசிகர்களை மிரளவைத்த சாக்‌ஷி..!
 

80 களில் இருந்து பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருபவர் சார்லி. குறிப்பாக நடிகர் விஜய்யுடன் 'காதலுக்கு மரியாதை', 'கண்ணுக்குள் நிலவு', அஜித்துடன் 'அமர்க்களம்', போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 

actor chalie give police compliant for twitter issue

இதுவரை 567 படங்களில் நடித்துள்ள நடிகர் சாறிலி, தற்போது, பிழை,  தீர்ப்புகள் திருத்தப்படலாம், வால்டர், ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகிறார்.  இதில் தீர்த்து தீர்ப்புகள் திருத்தப்படலாம் சத்யராஜ் நடிக்கும் படம். 'வால்டர்' திரைப்படத்தில்  சத்யராஜ் மகன் சிபிராஜுடன் நடித்திருந்தார். மேலும் சமீப காலமாக, மிகவும் அழுத்தம் திருத்தமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டி வருபவர்.

மேலும் செய்திகள்:சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜூஸ் கொடுக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா?.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த வைரல் போட்டோ!
 

தமிழ் திரையுலகில் பல ஆண்டுகளாக நடித்து வரும் நிலையிலும் இதுவரை, எந்த ஒரு சமூக ஊடகங்களிலும் இல்லாமல் இருந்த சார்லி ட்விட்டரில் இணைந்ததாக அவர் பதிவிட்டது போலவே போலி ஐடி ஒன்றை யாரோ உருவாக்கி உள்ளார். சில ரசிகர்கள் இது போலி கணக்கு என கண்டுபிடித்துவிட்ட போதிலும், சிலர் நடிகர் சார்லி உண்மையிலேயே ட்விட்டர் பக்கத்தில் இணைந்து விட்டதாக அவரை வரவேற்று வந்தனர்.

 

actor chalie give police compliant for twitter issue

இந்நிலையில் நடிகர் சார்லி, காவல் ஆணையர் அலுவலகத்தில் இதுகுறித்து புகார் ஒன்றை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போலி சமூக வலைத்தள கணக்கை தொடங்கி மோசடி செய்வதாக, காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் சார்லி அளித்துள்ள புகார் மனுவில் தெரிவித்துள்ளாராம். இதை தொடர்ந்து போலீசார் இந்த போலி கணக்கு குறித்து விரைவில் விசாரணை செய்யப்படும் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios