actor bavana.....actor dilip arrest who next....
திலீப் கைதாகிவிட்டார்: அடுத்தது யார்? இவர் தானா?…..அதிரடி திருப்பங்களுடன் நகரும் நடிகை பாவனா பலாத்கார வழக்கு....நியூஸ்பாஸ்ட் எக்ஸ்குளுசிவ்…..
நடிகை பாவனா பலாத்கார வழக்கில் மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் திலீப்பை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்நிலையில், அடுத்தடுத்து, சில முக்கிய நபர்கள் கைதாக உள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

அதற்கான வலுவான ஆதாரங்கள் போலீசிடம் கிடைத்துள்ள நிலையில், எந்நேரமும் அந்த இயக்குநரும், நடிகையும், அவரின் தாயாரும் கைது செய்யப்படலாம் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடிகை பாவனா, கடந்த பிப்ரவரி 17-ம் தேதி கொச்சி அருகே படப்பிடிப்பு முடிந்து இரவில் காரில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது, வழியில் காரை மறித்து ஏறிய 3 பேர், பாவனாவை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்தனர். பாவனாவின் புகாரின்பேரில், இந்த கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்ட பெரும்பாவூரைச் சேர்ந்த சுனில்குமார் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

முதலில் பணம் கேட்டு மிரட்டுவதற்காகவே பாவனாவை கடத்தினோம் என்று பல்சர் சுனில் போலீசிடம் தெரிவித்தார். பின், பாவனா கடத்தல் பின்னணியில் ஒரு நடிகருக்கு தொடர்பு இருப்பதாக கூறியதால் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.

பாவனா கடத்தல் சம்பவம் நடப்பதற்கு முன்பும், கடத்தப்பட்ட பின்பும் பல்சர் சுனில் பல்வேறு நபர்களுடன் செல்போனில் பேசி உள்ளார். அந்த செல்போன் நம்பரை வைத்து போலீசார் விசாரணை நடத்தியபோது அந்த போன் நம்பர் நடிகர் திலீப்பின் மேலாளர் அப்புனிக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.
சிறையில் இருந்தபடி சுனில், திலீப்பின் நண்பரான டைரக்டர் நாதிர்ஷாவை 3 முறை போனில் தொடர்புகொண்டு பேசிய தகவலும் வெளியானது. இது போலீசாருக்கு நடிகர் திலீப் மீதான சந்தேகத்தை வலுக்கச் செய்தது.

இதற்கிடையே நடிகர் திலீப், அண்மையில் நடிகை காவ்யா மாதவனை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். திலிப்புக்கும், முதல் மனைவி மஞ்சுவாரியாருக்கும் இடையே பிரச்சினை உருவாகி, பிரிவு ஏற்பட பாவனா முக்கியக் காரணமாக இருந்தார் எனக் கூறப்பட்டது.
மேலும், நடிகை பாவானாவுக்கும், திலிப்புக்கும் இடையே ரியல் எஸ்டேட், பணம் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், பாவனாவை பழிவாங்க திலீப் இந்த கடத்தலைச் செய்து இருக்கலாம் எனக் கூறப்பட்டது. ஆனால், திலிப் இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வந்தார்.
இந்நிலையில், நடிகை பாவனா பலாத்கார வீடியோ காட்சிகள் அடங்கிய மெமரி கார்டு போலீசாரிடம் பிடிபட்டது. அதன்பின் தனிப்படை ஐஜி தினேந்திர கஷ்யப் தலைமையிலான போலீஸார் மேற்கொண்ட துரிதமான விசாரணையில் பலதிடுக்கிடும் விவரங்கள் வெளியாகின.

விசாரணையில், நடிகை பாவனா பலாத்காரம் செய்யப்பட்ட சில நாட்களுக்கு பின், நடிகை காவ்யா மாதவன் நடத்தும் ஆன்-லைன் துணிக்கடைக்கு பல்சர் சுனி வந்து ரூ.2 லட்சம் பெற்றுச் சென்றுள்ளார். அந்த பணத்தை காவ்யா மாதவனின் தாய் ஷியாமளா கொடுத்துள்ளார். இவை அனைத்தும் கடையில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி, பின்னர் நீக்கப்பட்டு இருந்தன.
இந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசாருக்கு, குறிப்பிட்ட சில மணிநேரக் காட்சிகள் மட்டும் அழிக்கப்பட்டு இருப்பது சந்தேகத்தை கிளப்பியது. மேலும், சிறையில் இருந்தவாரே திலிப்புக்கு பல்சர் சுனி எழுதிய கடிதத்திலும் கடையில் பணம் வாங்கிய விவரத்தை தெரிவித்து இருந்தார்.
மேலும், நடிகை பாவனா கடத்தப்படுவதற்கு முன் பல்சர் சுனி தனது செல்போன் மூலம், இயக்குநர் நாதிர்ஷா, திலிப்பின் உதவியாளர் அப்புன்னி, நடிகர் திலிப் ஆகியோருடன் பேசியதும் போலீசாருக்கு விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தகுந்த ஆதாரங்களை திரட்டி, நடிகர் திலிப்பிடம் 2 வாரங்களாக தீவிர விசாரணை நடத்தி நேற்று கைது செய்தனர்.
திலிப்பின் நண்பரும், இயக்குநருமான நாதிர் ஷாவிடம் போலீசார் கடந்த மாதம் 28-ந்தேதி தனியாக ஒரு இடத்தில் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் நாதிர்ஷா கூறிய விவரங்களும், திலிப் கூறிய விவரங்களும் சிறிதுகூட தொடர்பு இல்லாமல் இருப்பதாக போலீசார் கூறுகின்றனர். இதையடுத்து, நாதிர்ஷாவுக்கு எதிரான ஆதாரங்களும் திரட்டப்பட்டுள்ளன.
அடுத்த திருப்பமாக இந்த வழக்கில் இயக்குநர் நாதிர்ஷா எந்நேரமும் கைதாவார் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
யாரும் எதிர்பாரா அடுத்த திருப்பமாக நடிகை காவ்யா மாதவனும் இந்த விவகாரத்தில் ஈடுபட்டு இருப்பது போலீசுக்கு தெரியவந்துள்ளது.

பல்சர் சுனி எழுதிய கடிதத்தில் “மேடம்” என்ற வார்த்தையை குறிப்பிட்டு கூறியுள்ளார். நடிகை காவ்யா மாதவன் நடத்தும் “லக் ஷயா” ஆன்-லைன் ரெடிமேட் துணிக்கடையை நிர்வகித்து வருபவர் காவ்யா மாதவனின் தாய் ஷியமளா, ஆகவே “மேடம்” எனக் குறிப்பிடுவது காவ்யா மாதவனையா அல்லது அவரின் தாயா என்பதை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையின் முடிவில் மிகவிரைவில் நடிகை காவ்யா மாதவன் அல்லது அவரின் தாய் ஷியமளா அல்லது இருவருமே கைதாக வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
