actor balaji cry in famouse programme
காமெடி நடிகர் தாடி பாலாஜி, விஜய் அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து அனைத்துத் தரப்பு ரசிகர்களாலும் நன்கு அறியப்பட்டவர். அண்மைக் காலமாக வாழ்க்கையில் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறார்.

ஏற்கெனவே முதல் மனைவியோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று, இரண்டாவதாக நிதியா என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணமானது முதல் பலரது பார்வைக்கும் சிறந்த தம்பதிகளாக தெரிந்த இவர்களது வாழ்க்கையில் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளால், போலீஸ், கோர்ட் என தற்போது விவாகரத்தில் வந்து நிற்கிறது.
இந்நிலையில் தற்போது தனிமையில் இருந்து வரும் இவர் பிரபல தொலைக்கட்சியில் காமெடி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் சமீபத்தில் குழந்தைகள் பங்கு பெறும் கிங்க்ஸ் ஆப் காமெடி என்கிற நிகழ்ச்சியில் சிறப்பு விருதினராகக் கலந்துகொண்டார்.

அப்போது அங்கே குழந்தைகள் ஆடுவதையும், பாடுவதையும் கண்டு இவர்களைப் பார்க்கும் போது என் மகள் போர்ஷிகா நினைவுதான் வருகிறது... என்று சொல்லி அழத் தொடங்கி விட்டார்... பின் தன்னுடைய மனதை சமாதானம் செய்துகொண்டு மீண்டும் நிகழ்ச்சியில் கவனம் செலுத்தினார்.
