நாசர் தலைமையிலான அணியினர்,  கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து,  தலைமை பொறுப்பை கைப்பற்றினர். 

இவர்களின் பதவி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து வருகிற 23-ந்தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுறத்தில் உள்ள, டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் நடிகர் சங்க தேர்தல் நடைபெற உள்ளது.

இதில், நாசருக்கு எதிராக இந்த முறை களமிறங்குகிறார் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட கே.பாக்யராஜ். 

நேற்றைய தினம், பாண்டவர் அணியை சேர்ந்தவர்கள், நடிகர் சங்க தேர்தலுக்கான மனு தாக்கல் செய்த நிலையில் இன்று, சங்கரதாஸ் சுவாமிகள் என்று பெயரில் கே.பாக்யராஜ் அணியை சேர்ந்தவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

நடிகர் சங்கத்தை உருவாக்கியவர் சங்கரதாஸ் சுவாமிகள் என்பதால் இந்த பெயரை வைத்துள்ளதாக கூறியுள்ளனர். மேலும், பொது செயலாளர் பதவிக்கு போட்டியிட உள்ள தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பேசுகையில்...

"முதல் மரியாதை பாண்டவர் அணிக்கு தான் அளிக்கப்படும்.  32 வருடமாக தனக்கும் நடிகர் சங்கத்திற்கும் தொடர்பு உள்ளது. என் தந்தையை தொடர்ந்து தற்போது நடிகர் சங்கத்தில் பணியாற்ற உள்ளேன். தற்போது விஷால் தலைமையிலான பாண்டவர் அணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. 

நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிக்க இன்னும் 22 கோடி தேவை படுகிறது. அதற்க்கு என்ன செய்யவேண்டும் என்பது குறித்த சில யோசனைகளை வைத்துள்ளோம் அதே போல் போன வருடம் மலேசியாவில், நடிகர் சங்கம் கட்டுவதற்கு, கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஆனால் அது குறித்த வரவு, செலவு என்ன என்பதை அவர்கள் தெரிவிக்க வில்லை. சங்கத்திலும் பணம் இல்லை என தயாரிப்பாளரும், நடிகருமான ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.

 அதைத் தொடர்ந்து என்ன நடந்தது என்பது குறித்த எந்த ஒரு அறிவிப்பும் இல்லை அதை அதன் பணமும் இங்கு சென்றது என தெரியவில்லை என ஐசரி கணேஷ் கூறுகிறார்