actor bagath pasil rejected national award

டெல்லியில் நேற்றைய தினம், நடைபெற்ற தேசிய விருது வழங்கும் விழா மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

2017-ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, டெல்லியில் மே 3-ஆம் தேதி விருதுகள் வழங்கும் விழாநடைபெறும் என்றும் இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்குவார் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், விழா தொடங்குவதற்கு முன் தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் பங்கேற்கப் போவதில்லை என விருது பெற்ற திரைக் கலைஞர்கள் 60-க்கும் மேற்பட்டோர் அறிவித்தனர்.

இந்நிலையில் இந்த விழாவில் கலந்துக்கொண்ட, குடியரசுத் தலைவர் 11 பேருக்கு மட்டுமே விருதுகளை வழங்குவார் என்றும், எஞ்சியவர்களுக்கான விருதுகளை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி வழங்குவார் எனவும் கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து, திரைக் கலைஞர்கள் 60-க்கும் மேற்பட்டோர் விழா புறக்கணிப்பு முடிவை எடுத்தனர்.

இதில் எப்போதும் தரமான படங்களை தேர்வு செய்து நடித்து வரும் பிரபல நடிகர் பகத் பாசில், சிறந்த குணச்சித்திர நடிகருக்காக Thondimuthalum Driksakshiyum படத்திற்காக தேசிய விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் குடியரசுத்தலைவர் வழங்காதை விருதை தன்னால் வாங்க முடியாது என மறுத்து திரும்பி சென்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.