தமிழ் சினிமாவில் அஜித், சிம்ரன், ராதிகா, சூர்யா, மம்முட்டி, என பல முன்னணி நடிகர் - நடிகைகளுடன், பல படங்களில் பணியாற்றியவர் நடிகர் பப்லு பிருத்விராஜ். இவர் தற்போது, பிரபல ஊடகம் ஒன்றிற்கு கொடுத்த பேட்டியில் நடிகர் நடிகைகள் பற்றி தன்னுடைய மனதில் பட்ட கருத்துக்களை ஓப்பனாக தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அஜித் பற்றி இவர் கூறியுள்ள தகவல் அஜித் ரசிகர்களை மிகவும் கோபம் அடையச் செய்துள்ளது.

தமிழில் 1971 ஆம் ஆண்டு 'நான்கு சுவர்கள்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் பப்லு. இந்த படத்தை தொடர்ந்து 'நீதி', 'டாக்டர் சிவா', 'நாளை நமதே', 'பாரதவிலாஸ்', போன்ற பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

'நான் சிவப்பு மனிதன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமான இவர், அஜித் நடித்த 'அவள் வருவாளா', 'சூர்யா நடித்த வாரணம் ஆயிரம்' நாகார்ஜுனாவுடன் 'பயணம்' போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மொழியை தவிர தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். திரைப்படங்கள் மட்டுமின்றி 'கோகுலத்தில் சீதை', 'அரசி', 'வாணி ராணி', 'மர்ம தேசம்' போன்ற பல சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர்.

இந்நிலையில் இவர் பிரபல ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி  அஜித் ரசிகர்களை சற்று அதிர்ச்சி அடைய செய்துள்ளது.  இந்தப் பேட்டியில் நடிகர் அஜித்தை பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு...  அஜித்தின் பிளஸ் மற்றும் மைனஸ் என இரண்டையுமே கூறியுள்ளார்.  


"அஜித் மிகவும் மரியாதையான மனிதர், ஸ்டைலிஷான நடிகர் என்றும்,  ஆனால் அவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் கிடையாது. ஜீரோ டெடிக்கேஷன் நபர் எனக் கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.  அவருக்கு அதிர்ஷ்டம் வீடு தேடி வருகிறது.  பிரியாணி சமைப்பதில் தான் அதிக ஆர்வம் உள்ளது என  கூறியுள்ளார்".

இதைத் தொடர்ந்து நடிகர் சூர்யா பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு, பதிலளித்த பப்லு,  "சூர்யா மிகவும் ஈடுபாட்டுடன் நடிக்கும் நடிகர்.  ஆனால் உலகமே தன்னைச் சுற்றி இயங்குகிறது என்கிற மனநிலையில் இருப்பதாக தான் கருதுவதாகவும், அவரது நடிப்பு காலம் முடிந்து விட்டது என கூறியுள்ளார்".

இதைத் தொடர்ந்து இயக்குனர் பாலச்சந்தர் பற்றி எழுப்பிய கேள்விக்கு, "அவர் தன்னுடைய குரு, அவரை பற்றி தினமும் பேசுவேன்.  அவரைப்போல் ஒருநாள் இயக்குனராக தனக்கு விருப்பம் என்றும் தெரிவித்தார்".

பின் பிரபல மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி பற்றி பேசிய அவர்,   "நல்ல நடிகர்,  நிறைய பேச விரும்புவார்.  நான் கிளம்புகிறேன் என கூறினால் கூட, தன்னை அமர்ந்து பேசுவார். அவர் ஒரு நல்ல மனிதர் அதே நேரத்தில் சிறந்த நடிகர் என குறிப்பிட்டுள்ளார்". 

நடிகை பப்லு அஜித் மற்றும் சூர்யா பற்றி கூறியுள்ளது, இருதரப்பு ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.