தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகராக அறியப்பட்ட பப்லு பிரபல ஊடகம் ஒன்றில் தன்னுடன் நடித்த நடிகர் நடிகைகள் பற்றி வெளிப்படையாக கூறியுள்ளார்.

அந்த வகையில் நடிகை ராதிகாவுடன் இவர் அரசி, மற்றும் வாணி ராணி என இரண்டு சின்னத்திரை சீரியல்களில் நடித்துள்ளார். ராதிகாவுடன் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ள அவர், "ராதிகாவுடன் வேலை செய்வது கடினம் என தெரிவித்துள்ளார்.

நடிகர் சிம்ரன் பற்றி பேசுகையில்,  மிகவும் அன்பானவர். தனக்கு உள்ள பெண் தோழிகளில் அவரும் ஒருவர் என கூறியுள்ளார்.

 நடிகை ரம்யா கிருஷ்ணன் பற்றி பேசுகையில், சினிமா கேரியரில் ஏற்ற தாழ்வுகள் இருந்த போதிலும், எப்போதும் மாறாமல் ஒரே மாதிரி இருப்பவர். தனக்கு மிகசிறந்த தோழி என கூறியுள்ளார்.