Ashwin : சமீபகாலமாக சரியான கண்டன்ட் கிடைக்காமல் இருந்த நெட்டிசன்கள் தற்போது வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது போல அஸ்வினை வைத்து செய்கின்றனர். 

கோமாளி நிகழ்ச்சி மூலம் ஏகத்திற்கும் பிரபலமான அஸ்வின் குமார் தற்போது கோலிவுட்டில் ஹீரோவாகிவிட்டார். புதுமுகம் ஹரிஹரன் இயக்கத்தில் "என்ன சொல்லப் போகிறாய்" படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் அஸ்வின். அந்த படத்தில் குக் வித் கோமாளி புகழும் நடிக்கிறார். படத்தை டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. விவேக் மெர்வின் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் அவந்திகா, தேஜஸ்வினி இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். டெல்லி கணேஷ், சுபா பஞ்சு ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு பணிகளை முடித்துள்ள படக்குழு, இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது. 

இந்நிலையில் "என்ன சொல்லப் போகிறாய்" இசை வெளியீட்டு விழாவில் பேசிய அஸ்வின் சூர்யா குறித்து பேசியிருந்தது தற்போது வைராக்கி உள்ளது. அந்த நிகழ்ச்சியில் அஸ்வின் பேசுகையில்; சூர்யாவின் படங்களை பார்க்கையில் பொறாமையாக இருக்கும் என்றும், தனக்கும் அது போன்ற ஸ்கிரிப்டில் நடிக்க ஆசையாக உள்ளது என தெரிவித்துள்ளார். அதோடு நிறுத்தினாரா தனக்குள்ள முதல் படத்திலேயே வாய் விட்டு மாட்டிக்கொண்டுள்ளார். மேடையில் பேசிய அஸ்வின் தன்னிடம் 40 இயக்குனர்கள் கதை சொன்னதாகவும் அதை கேட்ட தான் தூங்கி விட்டதாகவும் பேசியுள்ளார்.

இவரது பேச்சால் கடுப்பான இயக்குனர்கள் ஒருபுறம் கண்டனம் தெரிவிக்க மாரு புறம் அஸ்வினை வைத்து மீம்ஸுகளால் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். சமீபகாலமாக சரியான கண்டன்ட் கிடைக்காமல் இருந்த நெட்டிசன்களுக்கு வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது போல அஸ்வினை வைத்து செய்கின்றனர். அவ்வாறு வெளியான மீம்ஸ் இதோ....

Scroll to load tweet…

Scroll to load tweet…

Scroll to load tweet…