நடிகர்கள் சிலர் தங்களுடைய திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக நடத்த விருப்பம் இல்லாமலோ...என்னவோ மிகவும் ரகசியமாக திருமணம் செய்துக்கொள்கின்றனர். சமீபத்தில் கூட பிரபல நடிகை ஸ்ரேயா மும்பையில் தன்னுடைய காதலரை ரகசியமாக திருமணம் செய்துக்கொண்டார். 

இந்நிலையில் இதே போல் 'கோழி கூவுது', 'காதல் சொல்ல ஆசை' , 'உலா', உள்ளிட்ட பல படங்களிலும் பல்வேறு சின்னத்திரை நிகழ்சிகளில் நடுவாராக இருந்துள்ள நடிகர் அசோக் கடந்த 19 ஆம் தேதி தன்னுடைய காதலி சரண்யா என்பவரை திருப்பதியில் திடீர் என திருமணம் செய்துகொண்டுள்ளார். சரண்யா வங்கியில் பணியாற்றி வருகிறார் என்று கூறப்படுகிறது. 

இதுகுறித்து தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள இவர், 'எதிர்பாராத காரணத்தால் திடீரென திருமணம் நடைப்பெற்று விட்டதாகவும் , இதனால் நண்பர்களுக்கு அழைப்பு விடுக்க முடியவில்லை. இது காதல் திருமணம் என்றாலும் பெற்றோர்களின் சம்மதத்தோடு நடந்ததாகவும், விரையில் திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கு அனைவரையும் அழைக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.