மகள்கள் தினத்தில் நடிகர் ஆர்யா (Arya) தன்னுடைய செல்ல மகளுக்கு வித்தியாசமான பெயர் வைத்து அழகு பார்த்துள்ளார். 

நடிகர் ஆர்யா நடிப்பில் கடைசியாக இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்த 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததோடு, ஆர்யாவின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் பெரிதாக பாராட்டப்பட்டது. இதனையடுத்து ஆர்யா நடிப்பில் தயாராகி வரும் அரண்மனை 3, எனிமி ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் திரையுலக நட்சத்திரங்களான ஆர்யா - சாயிஷா தம்பதி குறித்து மிகவும் மகிழ்ச்சியான செய்தியை அவர்களுடைய நண்பரான நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். அதாவது விஷால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "இந்த செய்தியை சொல்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் மாமாவாகி உள்ளேன்". எனது சகோதரர் ஆர்யா மற்றும் சாயிஷாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. என்று சந்தோஷமான தகவலை வெளியிட்டார்.

மேலும் செய்திகள்: சபாஷ் சரியான போட்டி... ஷங்கர் மகள் அதிதிக்கு டஃப் கொடுக்க களமிறங்கும் அடுத்த வாரிசு நடிகை..!!

இவர்களுக்கு குழந்தை பிறந்து இரண்டு மாதம் ஆகும் நிலையில், ஆர்யா தன்னுடைய செல்ல மகளுக்கு மகள்கள் தினத்தன்று மிகவும் வித்தியாசமான பெயர் சூட்டியுள்ளார். அதாவது தன்னுடைய மகளுக்கு அரியானா என பெயர் சூட்டியுள்ளதாக, சமூக வலைத்தளத்தில் தெரிவிக்க ஆர்யாவின் குழந்தைக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: உடலை இறுக்கி பிடித்திருக்கும்... பிங்க் நிற பீச் உடையில் படு கிளாமரில் போஸ் கொடுத்த விஜய் டிவி டிடி..!!

நடிகர் ஆர்யாவும், சாயிஷாவும் முதல்முறையாக, 'கஜினிகாத்' படத்தில் இணைந்து நடித்தபோது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின் இருவரும் பெற்றோரின் சம்மதத்துடன், கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டனர். கடந்த முறை லாக்டவுனில் கூட சாயிஷா சற்றே குண்டாக இருந்ததால் ஏதாவது விசேசமா? என கேட்டு நச்சரித்து வந்த ரசிகர்கள், அவர் கர்ப்பமாகவே இருந்ததாக வதந்திகளை பரப்பினர். ஆனால் அதற்கு சாயிஷா அப்போது மறுப்பு தெரிவித்ததோடு, வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். தற்போது திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் பெற்றோராக புது பொறுப்பேற்றுள்ள ஆர்யா, சாயிஷாவிற்கும் வாழ்த்துக்கள்.