கடந்த சில நாட்களாக தமிழ் சினிமாவின் ஹாட் டாப்பிக்,  நடிகர் ஆர்யா, மற்றும் நடிகை சாயிஷா திருமணம் பற்றி தான். இது உண்மையா பொய்யா என தற்போது வரை  பலருக்கும் ஒரு சந்தேகம் இருந்து வருகிறது.

காரணம், காதலிப்பதாக கிசுகிசுக்கப்படும், ஆர்யா மற்றும் சாயிஷா இருவருமே....  திருமணம் குறித்து சமூக வலைதளத்தில், அல்லது நேரடியாகவோ... மூச்சி விடாமல் இருந்தனர். ஆனால் இருவருக்கும் நம்பிக்கையான சிலர் இவர்களுடைய காதல் உண்மை தான் என அடித்து கூறினர்.

மேலும் எப்போதும் சாயிஷா, படபிடிப்பு நேரம் போக,ஆர்யாவுடன் வீடியோ கால் தான் பேசிக்கொண்டிருப்பதாகவும், ஆர்யாவும் சயிஷாவுடனான காதலை திருமணம் வரை கொண்டுசென்றதாக கூறப்பட்டது. 

ஆனால், ஆர்யா வீட்டில் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டாலும், சாயிஷா வீட்டில், ஆர்யாவின் வயது மற்றும் இவருக்கு திரையுலகில் உள்ள அரசால் புரசலான பேச்சை வைத்து, திருமணத்திற்கு சம்மதிக்க மறுத்ததாகவும் கூறப்பட்டது.

மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன் ஆர்யா திருமணத்திற்கு பெண் தேடிய 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான அபர்நதி, 'ஆர்யா-சாயிஷா திருமண குறித்து கூறுகையில்.... 

இது  " 99% இது வதந்தி என்றும்,  ஆர்யா, சாயிஷா, இருவரும் உண்மையில் காதலித்திருந்தால் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் இதுகுறித்த செய்தியை வெளியிடாமல் இருப்பார்களா என கேள்வி எழுப்பினார்.

இப்படி ஆர்யா - சாயிஷா குறித்து பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில், அனைத்திற்கும் முற்று புள்ளி வைக்கும் விதமாக ஆர்யா தற்போது அவருடைய ட்விட்டர் பக்கத்தில் சயிஷாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு , திருமணம் குறித்த செய்தியை பதிவிட்டுள்ளார். 

 

"அதில், பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் ஆசிர்வாதத்துடன் எங்களுடைய வாழ்க்கையில் மிக முக்கிய நிகழ்வான திருமணம் வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளது என கூறியுள்ளார். இதனால் எப்போது ஆர்யா திருமணம் என கேட்டுக்கொண்டிருந்த ரசிகர்கள் பலர் இவர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.