தமிழகமே போற்றும், தலை சிறந்த தலைவராகவும், நடிகராகவும் இருந்தவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இவரின் புகழ் சொல்லுக்கடங்காதவை. தற்போது வரை இவரை உயிராய் போற்றும் பல ரசிகர்கள், மற்றும் தொண்டர்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றனர்.

அதே போல் இவரால் துவங்கப்பட்ட அதிமுக கட்சி, இந்த மண்ணுலகை விட்டு எம்.ஜி.ஆர் என்கிற மிகப்பெரிய தலைவர் மறைந்த பின்னரும், இந்த தமிழகத்தை ஆட்சி செய்து வருகிறது.

இவரை ஒரே ஒரு முறை கண்களால் பார்த்துவிட்டால் அதுவே பாக்கியம் என நினைப்பவர்கள் மத்தியில், அவரின் மடியில் மிகவும் உரிமையாக அமர்ந்திருக்கிறார், இன்று தமிழ் சினிமாவில் பல படங்களில் முன்னணி நடிகராக நடித்துக்கொண்டிருக்கும் இந்த நடிகர்.

அவர் வேறு யாரும் இல்லை, பழம் பெரும் நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய் தான். இது அவருக்கு கிடைத்த மிக பெரிய பாக்கியம் என்றே சொல்லலாம். சிலருக்கு மட்டுமே கிடைத்த இந்த குடுப்பணை இவருக்கும் வாய்த்திருக்கிறது உண்மையில் இது பெருமை பட வேண்டிய விஷயம் தான்.