கோலிவுட் திரையுலகில், பாக்ஸ் ஆபீஸ் கிங் என பெயர் பெற்றவர் தல அஜித், இவர் அவ்வப்போது அவருடைய மேனேஜரிடம்,  தன்னை பற்றி விசாரித்துக்கொண்டிருப்பதாக நடிகர் அருண் விஜய் பெருமையாக கூறியுள்ளார்.

வாரிசு நடிகராக திரையுலகில் 1995 ஆம் ஆண்டு, இயக்குனர் சுந்தர் சி, இயக்கத்தில் வெளியான 'முறை மாப்பிளை ' படத்தில் அறிமுகமானவர் நடிகர் அருண் விஜய். இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஒரு பாடலையும் பாடினார். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு இந்த படம் வெற்றிபெறவில்லை என்றாலும் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து 'கங்கா கௌரி', 'பாண்டவர் பூமி' ஆகிய வெற்றி படங்களில் நடித்தாலும், இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் தோல்வியை தழுவியது. இதனால் சில காலம் திரையுலகை விட்டே ஒதுங்கினார்.

பின், அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தின் மூலம் ஸ்டைலிஷ் வில்லனாக ரீ-என்ட்ரி கொடுத்தார். இந்த படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. கதாநாயகனாக நடித்து கிடைக்காத விருதுகள்,  வில்லனாக நடித்த இந்த படம் பெற்று தந்தது. 

இந்த படத்திற்கு பின் கதைகளை கவனமாக தேர்வு செய்து நடிக்க துவங்கினார் அருண் விஜய். அந்த வகையில் இவர் நடித்து 2017 ஆம் ஆண்டு வெளியான 'குற்றம் 23 ' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று, மீண்டும் இவருக்கு கதாநாயகன் அந்தஸ்தை பெற்று தந்தது.

தற்போது இவர் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'தடம்' இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் அணைத்து பணிகளும் நிறைவு பெற்று, விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. மேலும் இந்த படத்தின்  ப்ரோமோஷன் பணிகளும் படு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், சமீபத்தில் தடம் படம் குறித்து பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அருண் விஜய்யிடம், அஜித் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர் , அஜித்துடன் நேரடியாக நான் பேசவில்லை என்றாலும் அஜித்,  என்னை பற்றி அவருடைய மேனேஜரிடம் கேட்டுக் கொள்கிறார்.

எனக்கும், அவருக்கும் இருக்கும் உறவு சந்தோஷமாக இருக்கிறது, அவர் சொன்னது அனைத்தும் நியாபகம் உள்ளது அதன் படி நடந்து கொள்வேன் என கூறியுள்ளார்.