மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் எனப்படும் தேசிய தகுதிகாண தேர்வு வரும் மே 6-ஆம் தேதி நடைபெறும் என்று சிபிஎஸ்இ வாரியம் அறிவித்துள்ளது.

இந்த தேர்வுகள் எழுதும் மாணவர்கள் பலருக்கு, வெளி மாநிலங்களில், தேர்வு மையம் போடப்பட்டுள்ளது. இதனால் பல கிராமப்புற ஏழை மாணவர்கள் தேர்வு எழுத முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இப்படி குடும்ப சூழ்நிலை காரணமாக தேர்வு எழுத முடிதாத மாணவர்களுக்கு, பொதுமக்கள் முதல் பிரபலங்கள் வரை தானாக முன் வந்து உதவிகள் செய்வதாக அறிவித்து வருகின்றனர். ஏற்கனவே நடிகர் பிரசன்னா உதவிகள் செய்வதாக தெரிவித்துள்ள நிலையில்.

தற்போது அரசியல் குடும்ப வாரிசும், நடிகருமான அருள்நிதி... நீட் தேர்வு எழுத வெளி மாநிலங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு உதவிகள் செய்வதாக தெரிவித்து போன் நம்பர் கொடுத்துள்ளார். 9894777077 இந்த போன் நம்பருக்கு போன் செய்தால் மாணவர்களுக்காக உதவிகள் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.