ஊரடங்கு நேரத்தில் பட வேலைகள் அனைத்தும் முடங்கியுள்ள நிலையில், நடிகர் அருள்நிதி கமிட் ஆகியுள்ள, திரில்லர் படம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ஊரடங்கு நேரத்தில் பட வேலைகள் அனைத்தும் முடங்கியுள்ள நிலையில், நடிகர் அருள்நிதி கமிட் ஆகியுள்ள, திரில்லர் படம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த படத்தை விஜய் ராஜேந்திரா என்பவர் இயக்க உள்ளார். இப்படம் கல்லூரி சம்பவங்களை மையப்படுத்தி, திக் திக் காட்சிகளுடன் திரில்லராக எடுக்கப்பட உள்ளதாகவும், விரைவில் இந்த படத்தின் தலைப்பு அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு உத்தரவு முடிந்தபின் துவங்கும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை அவந்திகா மிஸ்ரா நடிக்கவுள்ளார்.

பிரபல மாடலும், நடிகையுமான இவர், தெலுங்கு திரையுலகில் 'மாயா' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் நடிகர் அசோக்செல்வன் நடித்த 'நெஞ்சமெல்லாம் காதல்' படத்தின் மூலம் கடந்த 2017ம் ஆண்டு தமிழில் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக, அருள்நிதி நடிப்பில் கே 13 திரைப்படம் வெளியானது. இதைத்தொடர்ந்து, தற்போது நடிகர் ஜீவாவுடன் இணைந்து தேசிய விருது இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தநிலையில் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.