Asianet News TamilAsianet News Tamil

’ஒரு கோடி ரூபாய் சம்பளம் வேண்டும்’...நடிகர் அப்புக்குட்டியின் சின்ன ஆசை...

சின்னச்சின்ன வேடங்களில் நடித்து வந்த அப்புக்குட்டியை ‘அழகர்சாமியின் குதிரை’படத்தின் மூலம் கதைநாயகனாக்கி அழகு பார்த்தார் இயக்குநர் சுசீந்திரன். அப்பட ரிலீஸுக்குப் பின்னர் மேலும் ஒன்றிரண்டு குப்பைப்படங்களில் நாயகனாக நடித்த அப்புக்குட்டி அவை அத்தனையும் தோல்வி அடைந்த நிலையில் மீண்டும் குணச்சித்திர நடிகராகவே படங்களில் நடித்து வந்தார்.
 

actor appukkutty interview
Author
Chennai, First Published Sep 28, 2019, 12:36 PM IST

மிக விரைவில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகனாகவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நான் சினிமாவில் நடிக்க வந்து 10 ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில் அப்படி ஆசைப்படுவதில் தவறு ஒன்றும் இல்லை என்றே நினைக்கிறேன்’என்கிறார் நடிகர் அப்புக்குட்டி.actor appukkutty interview

சின்னச்சின்ன வேடங்களில் நடித்து வந்த அப்புக்குட்டியை ‘அழகர்சாமியின் குதிரை’படத்தின் மூலம் கதைநாயகனாக்கி அழகு பார்த்தார் இயக்குநர் சுசீந்திரன். அப்பட ரிலீஸுக்குப் பின்னர் மேலும் ஒன்றிரண்டு குப்பைப்படங்களில் நாயகனாக நடித்த அப்புக்குட்டி அவை அத்தனையும் தோல்வி அடைந்த நிலையில் மீண்டும் குணச்சித்திர நடிகராகவே படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் அவரை மீண்டும் கதைநாயகனாகக் கொண்டு ‘விவசாயி வாழ்க’என்ற படம் தயாராகியுள்ளது. இப்படத்தில் அப்புக்குட்டிக்கு ஜோடியாக வசுந்தரா நடிக்க ஹலோ கந்தசாமி, ஸ்ரீகல்கி, முத்துராமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் பி.எல்.பொன்னி மோகன்.அறிமுக இசையமைப்பாளர் ஜெய்கிருஷ் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீடு நேற்று சென்னையிலுள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.actor appukkutty interview

அவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய அப்புக்குட்டி,’நான் நடித்த படமொன்று மேடையிலேயே பிசினஸ் ஆகியிருக்கிறது. இதற்காக நான் சந்தோசப்படுகிறேன். இனி நான் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிவிடுவேன்.நம்பிக்கையிருக்கிறது.பயப்படாதீர்கள். ஏன் நான் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கக்கூடாதா? நான் திரைத்துறைக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது.

இந்தப் படத்தின் கதையை இயக்குநர் என்னிடம் சொல்லும் போது, என்னுடைய அம்மாவை நான் நேரில் பார்த்தது போலிருந்தது.எங்களிடம் விவசாய நிலம் கிடையாது. என்னுடைய பெற்றோர்கள் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் தான். நான் ஏன் சென்னைக்கு வந்தேன் என்றால் விவசாயம் செய்வதற்கு நிலமில்லை. நிலமிருந்தால் ஆடு மாடு மேய்த்துக் கொண்டிருப்பேன்.எனக்கு ஒரு வேளை சோறு போடக்கூட அம்மாவால் முடியவில்லை.பிறகு நாம் ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று எண்ணி, என்னுடைய தேவைகளுக்காக நான் சென்னைக்கு வந்தேன்.actor appukkutty interview

அதைவிட உண்மையான விசயம் என்னவென்றால், விவசாயம் அழிந்துவிட்டது. விவசாயிகள் படும் கஷ்டத்தை இயக்குநர் விவரிக்கும் போது,இந்தப் படத்தின் கதையை விடக்கூடாது என்று எண்ணி, உடனடியாக ஒப்புக்கொண்டேன்.என் கூடநடிப்பதற்கு நடிகைகள் தயங்குகிறார்கள். ஏன் தயங்க வேண்டும்? நான் நடிகனில்லையா? என்னையும் நடிகராக ஏற்றுக்கொள்ளக்கூடாதா..?அந்தவகையில் என்னுடன் நடித்த நடிகை வசுந்தராவை நான் மனதாரப் பாராட்டுகிறேன்.இனிமேல் என்னுடன் நடிப்பதற்கு நடிகைகள் முன் வருவார்கள் என்று நம்புகிறேன். ஒவ்வொரு காட்சியையும் சிறப்பாக இயக்கியிருக்கிறார்.

அழகர்சாமியின் குதிரை படம் எப்படி எனக்குப் பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்ததோ.அதே போல் இந்த வாழ்க விவசாயி படமும் எனக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுக்கும் என்று உறுதியாக நம்புகிறேன் என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios