Asianet News TamilAsianet News Tamil

Soori : "எங்க படத்துக்கு கிடைத்த அங்கீகாரம்".. சூரியால் மெய்சிலிர்க்கும் SK - எமோஷனலாக அவரே வெளியிட்ட வீடியோ!

Sivakarthikeyan : பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த 2018ம் ஆண்டு அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான கனா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தயாரிப்பாளராக அறிமுகமானார்.

Actor and Producer Sivakarthikeyan emotional on Kottukaali movie in Transilvania film festival ans
Author
First Published Jun 23, 2024, 7:10 PM IST

காமெடியனாக தனது பயணத்தை சின்னத்திரையில் தொடங்கிய நடிகர் தான் சிவகார்த்திகேயன். மெல்ல மெல்ல தன்னைத் தானே வளர்த்துக் கொண்டு, நிகழ்ச்சி \தொகுப்பாளராக மாறிய சிவகார்த்திகேயன், கடந்த 2012 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "மெரீனா" என்கின்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக கோலிவுட்டில் அறிமுகமானார். 

அதே 2012ம் ஆண்டு, இயக்குனர் எழில் இயக்கத்தில் வெளியான "மனம் கொத்தி பறவை" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் கதையின் நாயகனாக உருவெடுத்தார். அதன் பிறகு இவர் நடிப்பில் வெளியான "எதிர்நீச்சல்", "வருத்தப்படாத வாலிபர் சங்கம்", "மான் கராத்தே", "ரஜினி முருகன்" மற்றும் "ரெமோ" போன்ற படங்கள், இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை தமிழ் ரசிகர்கள் மத்தியில் கொடுத்தது. 

விஜய்யின் சைலன்ஸ்-க்குள்ள மிகப்பெரிய வைலன்ஸ் இருக்கு! தளபதி பிறந்தநாள் விழாவில் நடிகர் சவுந்தரராஜா பேச்சு!

இந்த 12 ஆண்டு கால திரை பயணத்தில், இன்று தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திரமாக சிவகார்த்திகேயன் மாறி இருக்கிறார் என்றால் அது மிகையல்ல. தொடர்ச்சியாக பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக இவ்வாண்டு துவக்கத்தில் "அயலான்" என்கின்ற திரைப்படம் வெளியானது. 

மேலும் "அமரன்" என்கின்ற திரைப்படமும், பிரபல இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் தற்பொழுது சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதனிடையே கடந்த 2018ம் ஆண்டு முதல் SK Productions என்ற நிறுவனத்தின் சார்பில் திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார் சிவகார்த்திகேயன். 

ஏற்கனவே "கனா", "நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா", "வாழ்", "டாக்டர்" மற்றும் "டான்" போன்ற படங்களை தயாரித்து உள்ள சிவகார்த்திகேயன், "கொட்டுக்காளி" என்கின்ற திரைப்படத்தையும் தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. பி எஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் சூரி மற்றும் நடிகை அண்ணா பென் ஆகியோர் நடித்திருந்தனர். 

இன்னும் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை என்றாலும், பல பன்னாட்டு திரைப்பட விழாக்களில் இந்த திரைப்படம் தொடர்ச்சியாக பல சாதனைகளை படைத்து வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் படைத்துள்ள ஒரு புதிய சாதனை குறித்து மனம் நெகிழ்ந்து ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். அவர் வெளியிட்ட தகவலின்படி, ட்ரான்சில்வேனியா நாட்டில் நடைபெறும் பன்னாட்டு திரைப்பட விழாவில் தங்களது "கொட்டுக்காளி" திரைப்படம் ஸ்பெஷல் ஜூரி விருது பெற்று அசத்தியுள்ளது.  

Samantha Photos: வாவ்... நீங்களும் அழகு... நீங்கள் இருக்கும் இடமும் பேரழகு! சமந்தாவின் ரீசென்ட் போட்டோஸ்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios