பொதுவாகவே இரண்டு பெரிய நடிகர்கள் ஒரே படத்தில் இணைந்து நடித்தாலே அவர்களுக்குள் ஏதேனும் கருத்து வேறுப்பாடு ஏற்ப்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாகவே இரண்டு நடிகர்கள் ஒரே படத்தில் இணைந்து நடிப்பதை தவிர்த்து விடுவர். 

மேலும் இவர்கள் நடிப்பை பற்றி விமர்சனம் செய்பவர்களும்... இந்த நடிகரை விட, அந்த நடிகர் நன்றாக நடித்துள்ளார் என ஒப்பிட்டு பேசுவதாலும் நடிகர்களுக்கு மனஸ்தாபங்கள் வர வாய்ப்பு உள்ளது. 

இரண்டு ஹீரோக்கள் திரைப்படம்:

அதையும் தாண்டி சில நடிகர்கள் இரண்டு மூன்று ஹீரோக்களுடன் கூட இணைந்து நடித்துள்ளனர். 'நேருக்கு நேர்', மற்றும் 'பிரண்ட்ஸ்' படத்தில் விஜய், சூர்யா, 'நண்பன்' படத்தில் விஜய், சூர்யா, ஸ்ரீகாந்த், ஜீவா, 'உல்லாசம்' படத்தில் அஜித், விக்ரம் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். 

இப்படி முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கும் போது இவர்களுக்குள் ஏதேனும் மன கசப்பு வந்தாலும், பெரும்பாலும் இவர்கள் அதனை வெளியே கூறிக்கொள்வதில்லை. இவர்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளும் போது ஒருவருடன் ஒருவர் முகம் கொடுத்து பேசிக்கொள்ளாத போது தான் இந்த பிரச்சனையே வெளியே தெரிய வரும்.

உல்லாசம்:

அந்த வகையில் கடந்த 1997 ஆம் ஆண்டு நடிகர் விக்ரம், மற்றும் தல அஜித் இணைந்து நடித்த போது இவர்கள் இருவருக்கும் எதோ சில மனகசப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இதை இவர்கள் இருவருமே வெளியே சொல்லிக்கொள்ளவில்லை. 

சில வருடங்கள் கழித்து நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்த போது தான் இருவரும் சந்திதுக்கொண்டுள்ளனர். அப்போது தங்களுக்குள் இருந்த மனக்கசப்பை மறந்து இருவரும் சகஜமாக பேசினார்களாம். இந்த தகவலை சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் சொல்லி தான் எல்லோருக்குமே தெரிய வந்துள்ளது