அஜித் சாரை எனக்கு ரொம்பப்  பிடிக்கும். அவருடைய படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை என நடிகர் அதர்வா கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல இளம் நடிகராக வலம் வருபவர் அதர்வா. மறைந்த நடிகரான முரளியின் மூத்த மகனான இவர் படத்திற்கு படம் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

இவர் தற்போது ஆர்.கண்ணன் இயக்கத்தில் மேகா ஆகாஷுடன் ஜோடி சேர்ந்த "பூமராங்"  வரும் மார்ச் 1 முதல் திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக அதர்வா பல்வேறு சுவாரஷ்யக் கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார்.

அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில்; அஜித் சாரை எனக்கு ரொம்பப்  பிடிக்கும். அவருடைய படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. தற்போது நடக்கா விட்டாலும், இனி வரும் காலத்தில் அது நடக்க வேண்டும். அவரே பெரிய வில்லனாக மிரட்டியவர். அவருக்கே வில்லனாக நடித்தால் எப்படி இருக்கும் என அதர்வா தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.