நடிகர் அதர்வா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தளபதி விஜய் மிகவும் உட்சகமாக சிரிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, சமூக வலைத்தளத்தையே தெறிக்க வைத்துள்ளார்.

இந்த புகைப்படம் கடந்த டிசம்பர் மாதம், அதர்வா முரளியின் சகோதரர் ஆகாஷ் முரளி - சினேகா பிரிட்டோ திருமண நிச்சயதார்த்தத்தில் போது எடுக்கப்பட்டது. இதுவரை யாரும் பார்த்திடாத இந்த புகைப்படத்தை அதர்வா வெளியிட, விஜய் ரசிகர்கள் லைக்குகள் சும்மா குவித்து வருகிறார்கள்.

அதர்வாவின் சகோதரர் திருமணம் செய்து கொள்ள உள்ள, சினேகா பிரிட்டோவின் தந்தை, விஜய்யின் நெருங்கிய குடும்ப நண்பர். ஆகாஷ் - சினேஹா இருவரும் வெளிநாட்டில் ஒன்றாக படித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஆரம்பத்தில் அதர்வா வீட்டில் இவர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றாலும் தற்போது முழு மனதோடு திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். விரைவில் இவர்களுடைய திருமணம் நடைபெற உள்ளது.

சேவியர் பிரிட்டோ உறவினர் என்பதை தாண்டி, தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் 'மாஸ்டர்' படத்தை, தயாரித்து வருகிறார்.

அதர்வா தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தில், விஜய் மற்றும் அதர்வா என இருவருமே வெள்ளை நிற ஷார்ட் அணிந்தபடி மிகவும் ஆனந்தமாக சிரித்தபடி உள்ளனர். வெளியிடங்களுக்கு வந்தால், மௌன சிரிப்பையே உதிர்ந்து செல்லும் தளபதி இப்படி ஒரு ஆனந்த சிரிப்பு சிரித்துள்ளது ரசிகர்களையே ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

 

View this post on Instagram

All smiles ! ✨

A post shared by StarBoy ⭐️ (@atharvaamurali) on Apr 20, 2020 at 2:50am PDT