நெடுஞ்சாலை படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் கொடுத்தவர் நடிகர் ஆரி, இதை தொடர்ந்து நயன்தாரா நடித்த 'மாயா', உள்ளிட்ட நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் திண்டிவனம் பகுதியில் படப்பிடிப்பில் இருந்த ஆரிக்கு, நேற்று இரவு அவரது உறவினர்கள் தொடர்பு கொண்டு, தாயார் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்த்துள்ளார் ஆரி , மேலும் அவரது தாயார் முத்துலட்சுமியின் இறுதி சடங்குகள் சொந்த ஊரான பழனியில் நாளை நடைபெறுவதாக கூறியுள்ளார் .
