RJ Balaji Sorgavaasal : பிரபல நடிகர் ஆர்.ஜே. பாலாஜி புதுமுக இயக்குனருடன் இணையவுள்ள ஒரு திரைப்படம் தான் சொர்க்கவாசல். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே துவங்கி நடந்து வருகின்றது.

தமிழ் சினிமாவில் நல்ல பல திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டுள்ள வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த படைப்பாக வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி உலகெங்கும் வெளியாக உள்ளது "சிங்கப்பூர் சலூன்" என்கின்ற திரைப்படம். இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் ஆர்.ஜே பாலாஜி கதையின் நாயகனாக நடிக்க, பிரபல நடிகர் லால் மற்றும் தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேலும் இந்த திரைப்படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் ஜீவாவும், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக மாறி உள்ள லோகேஷ் கனகராஜூம் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜனவரி 25ஆம் தேதி இந்த திரைப்படம் உலகெங்கும் வெளியாகவுள்ள நிலையில், தனது அடுத்த திரைப்பட பணிகளை விரைவில் துவங்க இருக்கிறார் ஆர்.ஜே பாலாஜி. 

மூன்றாம் பிறை படத்தில் முதலில் நடிக்கவிருந்தது ஸ்ரீ தேவி இல்லை.. செம சான்ஸை மிஸ் பண்ண பிரபல நடிகை..

அறிமுக இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகி வரும் "சொர்க்கவாசல்", என்கின்ற திரைப்படத்தில் ஆர்.ஜே பாலாஜி நடித்து வருகின்றார். ஏற்கனவே விடாமுயற்சி உள்ளிட்ட பல திரைப்படங்களை வாங்கி உள்ள பிரபல Netflix நிறுவனம் தான், ஆர் ஜே பாலாஜியின் "சொர்க்கவாசல்" OTT உரிமத்தையும் வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தற்பொழுது கோக்குல் கிருஷ்ணன் இயக்கத்தில் "சிங்கப்பூர் சலூன்" திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள ஆர்.ஜே பாலாஜி, அப்பட வெளியீட்டுக்கு பிறகு மீண்டும் தனது "சொர்க்கவாசல்" பட பணிகளை துவங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் கருணாஸ் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் ஆர்.ஜே பாலாஜியுடன் இணைந்து நடிப்பதாக கூறப்படுகிறது. 

அது போல பிரபல இயக்குனர் செல்வராகவும் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே கர்நாடகாவில் பல இடங்களில் சுமார் 37 நாட்கள் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது துவங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ராமர் கோவில் திறப்பு.. முதல் நாள் நடக்கும் விருந்து.. மொத்த செலவையும் ஏற்ற பிரபாஸ் - எத்தனை கோடி தெரியுமா?