உங்களை உயர்த்தி காண்பிக்க மத்தவங்களை என் அசிங்க படுத்துறீங்க? என நடிகை ஜாங்கிரி மதுமிதாவுக்கு நெத்தியடி பதில் அளித்துள்ளார் நடிகை அபிராமி.

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளராக இருந்த மது தனது கருத்தை வெளிப்படுத்த கையை அறுத்துக் கொண்டதால், விதிகளை மீறுவதாக உள்ளதாக பிக் பாஸ் வீட்டில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். அதனை தொடர்ந்து கையை அருத்துக்கொள்ளும் படி என்ன நடந்தது என்பதையும் தனக்கு நடந்த சில மோசமான நிகழ்வுகளையும் மதுமிதா முன்னணி இணைய தளத்திற்கு அளித்த பேட்டியில் பார்வையாளர்களை வெறுப்பை சம்பாதித்துள்ளார்.  

அதிலும், அதில்; தமிழ் பெண், தமிழ் பெண் என்று நீங்கள் மக்களின் சென்டிமென்ட்க்குக்காக பேசியதாக சொல்கிறார்களே என்ற கேள்வி பதிலளித்த அவர், அங்கே உள்ளே பல ஆண்கள் இருக்கிறார்கள், வெளியே பல ஆண்கள் பார்க்கிறார்கள் என்று கூட உணர்வு இல்லாமல், உள்ளாடையும் அணிய மாட்டார்.

மாலையானதும் டிரான்ஸ்ப்ரண்டான ஆடைகளை அணிந்தே அங்கும் இங்கும் அப்படியே சுத்திக்கொண்டிருந்தாள். அதையும் காட்டினார்கள், நான்காவது நாள் இப்படி சுற்றிக்கொண்டிருக்கும்போது எனக்கும் வனிதாவுக்கு ஷாக்,  இதை நாங்க அந்த பெண்ணிடம் கண்டிக்கிறோம், ஆனால் அது சரியாகல, தொடர்ந்து நடந்துகொண்டு தான் இருந்தது.  கலாச்சாரத்தை மதிக்கும் ஒரு தமிழ் பெண்ணாக என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என பொங்கினார்.

இந்நிலையில் மதுமிதாவின் இந்த பேச்சுக்கு சக போட்டியாளரான அபிராமி சரியான பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அபிராமி தனது சமூக வலைத்தளப்பக்கத்தில், "யாராவது இவர்களுக்கு நேர்கொண்ட பார்வை படத்தின் டிக்கெட்டுகளை அனுப்பி வைய்யுங்க" உங்களிடம் ஒரு கேள்வி, (நீங்கள் சக போட்டியாளர்களின் ஆடை பற்றி விமர்சித்ததற்கு) உங்களை உயர்த்தி காண்பிக்க மத்தவங்களை என் அசிங்க படுத்துறீங்க? என பதிவிட்டுள்ளார். அபிராமியின் இந்த வசனம் நேர்கொண்ட பார்வை படத்தில் "நீங்க ஒருத்தர் மேல விஸ்வாசம் காட்டுறதுக்காக இன்னொருத்தர ஏன் அசிங்கப்படுத்துறீங்க" என அஜித் பேசும் வசனத்துடன் ஒத்து போகிறது.