பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்து அதிக குறும்புத்தனத்தோடும், பின் அழு மூஞ்சியோடும் விளையாடுவர் அபிராமி. இவர் வெளியேற முக்கிய காரணம் என்றால் உள்ளே வந்த இரண்டாவது நாளே கவினை காதலிப்பதாக இவர் கூறியது, இவர் நடிக்கிறாரா என்கிற சந்தேகத்தை மக்கள் மனதில் எழ வைத்தது.

இதனால், இவருடைய ரசிகர்களே சிலர் இவரை விமர்சிக்க துவங்கினர். இதை தொடர்ந்து, முகேனை காதலிப்பதாக தெரிவித்தார். மற்ற போட்டியாளர்களுடன் பேசுவதை குறைத்து கொண்டு, முகேன் பின்னாடியே சுற்றி கொண்டிருந்ததால், இது கேம் என்பதை மறந்து இவருடைய கவனம் காதல் மீது மட்டுமே இருந்தது.

எனினும் தொடர்ந்து சில வாரங்கள் தப்பித்து வந்த இவர், பின் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு கூட, முகேன் தன்னை காதலிக்க வில்லை என்றாலும், தொடர்ந்து அவரை நான் காதலிப்பேன் என பேட்டிகளில் கூறி அதிரவைத்தார்.

மேலும் தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்த துவங்கியுள்ள அபிராமி, அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். 

அந்த வகையில் தற்போது அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு... 'கண்களின் நிலம் நோக்கி உன் வருகைக்காக என் காத்திருப்பு' என பதிவிட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் முடிவு பெற 5 நாட்களே உள்ள நிலையில் இது முகேனுக்கான பதிவா? என ரசிகர்கள் தொடர்ந்து அபிராமியிடம் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.