பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் ஆரம்பமாகியுள்ள முதல் காதல் அபிராமியுடைய காதல் தான். நிகழ்ச்சி தொடங்கிய இரண்டாவது நாளே, நடிகை ஷெரினிடம், கவினை காதலிப்பதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார்.

கவின் மீது காதல் வர இவர் சொன்ன காரணங்களும், ரசிகர்களால் எளிதில் ஏற்றுக்கொள்ளும் படி இல்லை. அதாவது அபிராமியின் அம்மா அருணா தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த "சரவணன் மீனாட்சி" தொடரை பார்ப்பாராம். அதனால் முன்பு இருந்தே கவின் மீது தனக்கு கிரஷ் இருந்ததாக கூறினார்.

மேலும், தன்னுடைய காதலை கவினிடம் துரத்தி துரத்தி கூறி பாத்தும் எந்த பலனும் இல்லாததால், நண்பராக இருக்கலாம் என கூறிவிட்டார். ஆனால் இந்த காதல் எப்போது வேண்டுமானாலும் தீவிர காதலாக மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு, பேட்டியளித்துள்ள அபிராமியின் அம்மா அருணா... "பிக்பாஸ் வீட்டில் உள்ள அபிராமி பற்றி கூறியுள்ளார். சிறு வயதில் இருந்தே அவருக்கு அதிகமாக நண்பர்கள் கிடையாது. தன்னிடம் அம்மா என்பதை விட ஒரு தோழி போல் தான் பழகுவார். 

பிக்பாஸ் வீட்டில் கவின் மீது கிரஷ் இருப்பதாக அவர் கூறுவது, அவர் மீது உள்ள அதிகப்படியான அன்பில் கூறலாம். எந்த விஷயத்தையும் எளிதில் அபிராமி முடிவு செய்ய மாட்டார். ஒருவேளை அவளுக்கு ஒரு பையனை மிகவும் பிடித்திருந்தால் அவருடைய வாழ்க்கை அது, அதனால் அவரின் முடிவிற்கு தடையாக இருக்க மாட்டேன் என கூறியுள்ளார்.