ஜல்லிக்கட்டு,விவசாயிகளின் போன்ற பொதுப்பிரச்சினைகளில் மக்களிடமிருந்து பணம் வசூலித்து, அதை அபார்ட்மெண்ட் வாங்குவதற்கும், கார்கள் வாங்கி சொகுசாக வாழவும் நடிகர் அபி சரவணன் பயன்படுத்திக்கொண்டார் என்ற நடிகை அதிதியின்  குற்றச்சாட்டுகளை மறுக்கிறார் அவர்.

இன்று சற்றுமுன்னர் பிரசாத் லேப் தியேட்டர் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றுக்கு அவசர அவசரமாக ஏற்பாடு செய்திருந்த அபி சரவணன் தன்னை விட்டு ஓடிப்போன நடிகை அதிதியை தான் முறைப்படி ரெஜிஸ்டர் திருமணம் செய்துகொண்டதற்கான சர்டிபிகேட்டுகளைக் காட்டினார். பின்னர் அதிதியின் அத்தனை குற்றச்சாட்டுகளையும் மறுத்த அவர் தான் அபார்ட்மெண்ட்ஸ் வாங்கியது எப்படி, சொந்தக் காசில் கார் வாங்கியது போன்றவற்றிற்கான ஆதாரங்கள் என்ற பெயரில் ஏகப்பட்ட ஜெராக்ஸ் காப்பிகள் வைத்திருந்தார்.

அதிதியை தனது மனைவிதான் என்று இன்னும் பிடிவாதம் பிடிக்கும் அபி சரவணன் அவர் தனது வீட்டிலிருந்த பீரோவில் கொள்ளையடித்துவிட்டுக் கள்ளக்காதலனுடன் ஓடிப்போனதற்கான சி.சி.டி.வி. ஃபுட்டேஜ் தன்னிடம் ஆதாரமாக இருப்பதாகவும், ஆனால் அவர் திருந்தி வந்தால் அவரை மனைவியாக ஏற்றுக்கொள்ளத் தயார் என்றும் தெரிவித்தார். அடுத்து உடனே அதிதி தனது ஆண் நண்பர்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் பத்திரிகையாளர்களிடம் தூக்கிக் காட்டினார்.

கடந்த சில தினங்களாக அதிதியும் அபி சரவணனும் ஒருவர் மீது ஒருவர் அடுக்கும் குற்றச்சாட்டுகளைப் பார்த்தால் ‘திருடா திருடி’ பட டைட்டில்தான் நினைவுக்கு வருகிறது.

அதிதி கேரளாவில் சில பேரை ஏற்கனவே சீட்டிங் செய்துவிட்டுத்தான் தமிழ் சினிமாவுக்கே அடியெடுத்துவைத்தாராம். தமிழிலும் அறிமுகமான முதல் படத்தில் இயக்குநரின் அடிவயிற்றில் அடித்து பத்தே நாட்களில் இதே கள்ளக் காதலனுடன் எஸ்கேப் ஆனவர். அடுத்து இந்த கள்ளக் காதலனின் மொத்த சொத்துக்களையும் சுருட்டிக்கொண்டு இன்னொரு கள்ளக் காதலனுடன் ஓடியவர்.

அபி சரவணனோ தான் அறிமுகமான ‘சேரநன்னாட்டிளம்பெண்களுடனே’ நாயகியைக் காதலித்து வஞ்சித்தவர். அடுத்து அதிதியைத் திருமணம் செய்தபிறகும் பல பெண்களுடன் தொடர்பிலிருந்தவர். தனது சொத்துக்களைச் சுருட்டி இன்னொரு காதலனுடன் ஓடிய பிறகும் அதிதியை மனைவி ஆக்கிக்கொள்ளவிரும்புபவர். பொதுப்பிரச்சினைகளில் சமூக சேவை செய்வதாகக்கூறி மக்களிடம் பணம் வசூலித்து சொந்த உபயோகங்களுக்கு சுருட்டிக்கொள்பவர்... ஆஹா வாட் எ காம்பினேஷன்..