அபிராமி ஒரு சில நேரங்களில், தன்னுடைய சுயமான குணத்தை வெளிப்படுத்தினாலும், சாக்ஷி மற்றும் வனிதா டீமுடன் சேர்ந்து கொண்டு, மதுவை எதிர்ப்பதிலேயே குறிக்கோளாக இருக்கின்றனர்.

நேற்றைய தினம், அபியை பார்த்து வனிதா உனக்காக போய் பேசிய சாக்ஷி தற்போது நாமினேஷனில் வந்து நிற்கிறார். அவருக்கு யாருடனும் நேரடி சண்டை இல்லை என கூறினார். எப்படியும் இந்த வாரம் சாக்ஷி வெளியேறுவார் என எதிர்பார்த்த நிலையில், எதிர்பாராத விதமாக பார்த்திமா பாபு வெளியேற்றப்பட்டார் என்பது அனைவரும் அறிந்தது தான்.

இது ஒருபுறம் இருக்க, சாக்ஷி எதையும் நேரடியாக கூறாமல் ஆமா சாமி போட்டு வருகிறார். அபிராமியிடம் அவருக்கு சப்போர்ட் செய்வது போல் பேசிவிட்டு, பின் வணிதாவிடம் அபியை பற்றியே குறை சொல்லுகிறார்.
இதெல்லாம் அறியாத அபிராமி, தன்னுடைய தோழிகளுக்கு தற்போது மதுவை பிடிக்காததால், மீண்டும் அவரிடம் சண்டை போடா வேண்டும் என நினைக்கிறார்.

இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், சாக்ஷியிடம் நான் பண்ண பெரிய தவறால், என்னோட இந்த ஃபுல் பேமிலியும் தன்னை நம்பவில்லை. தமிழ் தமிழ்னு இந்த பொண்ணு பேசுதுள்ள இதை மொதல்ல நான் தான் பேசணும். என கூறுகிறார் மற்றொரு புறம் மதுமிதா சாமி கும்பிடும் காட்சி காட்டப்படுகிறது.

இதை தொடர்ந்த என்கிட்டே 5 நிமிஷம் பேசணும்னு சொல்றீங்களா, என்ன பேசணும். கண்டிப்பா கலாச்சாரம்னு பேசுவா நான் சும்மா இருக்க மாட்டேன் என சண்டைக்கு தயாராகிறார். இவரின் வேகமும், யார் எப்படி என புரிந்து கொள்ளாமல் செயல்படும் குணமும் தான் மக்களுக்கு இவர் மீது கோவத்தை வரவழைத்துள்ளது.